
57 ஆஸி. வீரர்கள்
இதில் கத்துக்குட்டி நாடுகளை சேர்ந்த 20 பேர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 57 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள பெயரை பதிவு செய்துள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 33 வீரர்களும் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

ஆஸி. வீரர்கள் விலகல்
இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்யவில்லை. ஆஸ்திரேலியா வீரர் லபுஷேனை கடந்த ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தையும் யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பெயர் பதிவு செய்யவில்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கம்மின்ஸும், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

காரணம் என்ன?
இதற்கு ஐபிஎல் தொடருக்கு பின் விளையாடப்பட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரே காரணமாக உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் தொடர், ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என அடுத்தடுத்து வருவதால், ஆஸ்திரேலியா வீரர்கள் பலரும் ஓய்வெடுக்க விரும்பி வருகிறார்கள். இதனால் பெரும்பாலான ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்று கடைசி நேரத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

நாடா, பணமா?
ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிடைக்கும் வருவாயை விட, ஐபிஎல் தொடரில் கிடைக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவாய் அதிகம். இதனாலேயே ஆஸ்திரேலியா வீரர்கள் ஏராளமானோர் தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை பணம், நாடா என்று வரும் போது ஏராளமான வீரர்கள் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித்தை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.