For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup Flashback:அதிக போட்டிகளில் கலக்கிய 3 கேப்டன்கள்..!! அசத்தல் புள்ளி விவரங்கள்… !!

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில், கேப்டனாக அதிக போட்டிகளில் 3 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பற்றிய விவரங்களை இந்த சிறு தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா உலக கோப்பை தொடர். வரும் 30ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகிறது. உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளிலும் சிறந்த கேப்டன்கள் அணியை வழி நடத்த உள்ளனர்.

ஒரு அணியின் வெற்றி, தோல்விக்கு முழு பொறுப்பு அந்த அணியின் கேப்டனையே சென்று சேரும். அதை நாம் அறிந்ததே. உலக கோப்பை போன்ற மிக பெரிய தொடர்களின் போது, இக்கட்டான சூழ்நிலையிலும் கேப்டன் முடிவு முக்கியமான ஒன்று.அத்தகைய உலக கோப்பையில், கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் யார் என்பதை காணலாம்.

இப்பவும் தல தோனிதாங்க இந்திய அணிக்கு கேப்டன்.. போட்டு உடைத்த சுரேஷ் ரெய்னா.. அப்ப கோலி இல்லையா?! இப்பவும் தல தோனிதாங்க இந்திய அணிக்கு கேப்டன்.. போட்டு உடைத்த சுரேஷ் ரெய்னா.. அப்ப கோலி இல்லையா?!

3 டெஸ்ட்டுகளில் சாதனை

3 டெஸ்ட்டுகளில் சாதனை

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாரூதினை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இளமை காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, அரும்பாடு பட்டு, தமது முயற்சி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அணியில் இடம்பிடித்தவர். தமது முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து சாதனை படைத்தவர்.

23 உலக கோப்பை போட்டிகள்

23 உலக கோப்பை போட்டிகள்

1980களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 1992, 1997 மற்றும் 1999 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் 23 உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியவர்.

12 போட்டிகளில் தோல்விகள்

12 போட்டிகளில் தோல்விகள்

ஆனால், இவரது தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. உலக கோப்பையில் அசாரூதின் தலைமையில், 12 போட்டிகளில் தோல்வியும், 10 போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளது. உலக கோப்பை தொடரில் அசாரூதினின் பேட்டிங் சராசரி 39.88. அதிகபட்ச ரன்கள் 93.

பிளமிங் கேப்டன்

பிளமிங் கேப்டன்

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். தற்போதைய சென்னை அணியின் கோச்சும் கூட. அனுபவ வீரரான பிளமிங் 1996 ம் உலக கோப்பையில் அறிமுகமானார். பின்னர், 1999ல் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 உலக கோப்பை வரை நியூசிலாந்து கேப்டனாக இருந்தார்.

ஆளுமை கொண்ட கேப்டன்

ஆளுமை கொண்ட கேப்டன்

27 உலக கோப்பை போட்டிகளில் பிளமிங் கேப்டனாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி உலக கோப்பையில் அவரது தலைமையில் 16 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. சிறந்த ஆளுமை திறமையை கொண்ட இவரது கேப்டன்ஷிப்பை அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் இருக்கிறது.

 2 முறை அரையிறுதி

2 முறை அரையிறுதி

இவரது தலைமையில் நியூசிலாந்து 1999 மற்றும் 2007 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் பங்கேற்றது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினால் அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஒரு பேட்ஸ்மேனாக பிளமிங் உலக கோப்பையில் சாதனை படைத்துள்ளார்.2 உலக கோப்பைகளில் கேப்டனாக 882 ரன்களை குவித்திருக்கிறார்.

கேப்டன் பாண்டிங்

கேப்டன் பாண்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் என்ற பட்டியலில் ரிக்கி பாண்டிங்குக்கு தனி இடம் உண்டு. ஏன் என்றால் 2003 மற்றும் 2007 உலக கோப்பை தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு, கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.

காலிறுதியில் வெளியேற்றம்

காலிறுதியில் வெளியேற்றம்

2011ம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் ரிக்கி பாண்டிங் கேப்டனாக செயல் பட்டார். ஆனால் காலிறுதியில் இந்திய அணியினரால் வெளியேற்றப்பட்டார். (அந்த போட்டியில் யுவராஜின் ஆட்டம் அட்டகாசம்). உலக கோப்பையில் ரிக்கி பாண்டிங் தலைமையில் 29 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்று இருக்கிறது. அதில் 26 முறை வெற்றியும், 2 முறை தோல்வியையும் தழுவி இருக்கிறது.

46 போட்டிகளில் கேப்டன்

46 போட்டிகளில் கேப்டன்

1996ம் உலக கோப்பை தொடரில் அறிமுகமான பாண்டிங், உலக கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில்... அதாவது 46 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். உலக கோப்பையில் அவர் அடித்த ரன்கள் 1160, சராசரி 52.77 ஆகும்.

Story first published: Tuesday, May 28, 2019, 15:38 [IST]
Other articles published on May 28, 2019
English summary
Azharuddin, fleming, ponting are top 3 captains who played most world cup matches as captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X