For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு வந்த அதே சிக்கல்.. வசமாக மாட்டி கொண்ட பாபர் அசாம்.. கிளாஸ் எடுத்த ரமிஸ் ராஜா

லாகூர் : விராட் கோலி என்ன பிரச்சனையை சந்தித்தாரோ, தற்போது அதேபோல ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு உள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்.

விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். மேலும் டி20 அணியில் விராட் கோலி இடம் பெறக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அப்போது விராட் கோலிக்கு முதல் முறையாக ஆதரவு கொடுத்த பாபர் அசாம் இந்த கடினமான காலம் மாறும் என்று நம்பிக்கை அளித்தார்.

இந்திய அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.. நியூசி. தொடருக்கான அணி அறிவிப்பு.. சென்னையில் 3 போட்டிஇந்திய அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.. நியூசி. தொடருக்கான அணி அறிவிப்பு.. சென்னையில் 3 போட்டி

 கோலி Vs பாபர் அசாம்

கோலி Vs பாபர் அசாம்

இந்த நிலையில் 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் விளாசி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சதத்தை பூர்த்தி செய்தார் . ஆனால் பாபர் அசாம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடுமையாக சொதப்பினார். அதில் அவர் ஒருமுறை கூட 50 ரன்கள் அடிக்கவில்லை.

 ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

தொடக்கத்தில் பாபர் அசாம்ச சொதப்பியதால் பாகிஸ்தான் அணியும் பேட்டிங்கில் ஆட்டம் கண்டது. டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு பாபர் அசாம் தனது பார்மைல் இழந்தது பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் விராட் கோலிக்கு ரசிகர்கள் எப்படி எதிர்ப்பு குரல் கொடுத்தார்களோ, அதேபோல் பாகிஸ்தான் ரசிகர்களும் பாபர் அசாமை நோக்கி கேள்வி எழுப்பு வருகின்றனர்.

சொல்லி கொடுக்க தேவையில்லை

சொல்லி கொடுக்க தேவையில்லை

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா அளித்துள்ள பேட்டியில், பாபர் அசாமிடம் ஆசிய கோப்பை குறித்து பேசினேன். அவர் அடித்து ஆட வேண்டும் என்று நோக்கில் சில தவறான ஷாட்களை ஆடி வருகிறார்.அவர் ஒரு சிறந்த வீரர். அவருடைய திறமையை அவர் சரியான வழியில் வெளிப்படுத்த வேண்டும். பாபர் அசாம் ஒரு மிகப்பெரிய வீரர். அவருக்கு யாரும் பேட்டிங் எப்படி ஆட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.அவருடைய ஷாட்கள் எல்லாம் கிரிக்கெட் புக்கில் இருப்பது போல் இருக்கும். 26 வயதில் ஒரு ஜாம்பவான் போல் விளையாடுகிறார்.

பாபர் அசாம் ஒரு மனிதரே

பாபர் அசாம் ஒரு மனிதரே

அவர் எப்படி விளையாடுவாரோ அதே மாதிரி அவர் விளையாட வேண்டும். பாபர் அசாமும் ஒரு மனிதர் தானே. இதனால் பாபர அசாமை சுற்றியுள்ளவர்கள் அவர் வேகமாக ஆட வேண்டும் என்று வற்புறுத்தினால், அது அவர் மனதை பாதிக்கும். இதனால் இயல்பான ஆட்டத்தை பாபர் வெளிப்படுத்த வேண்டும். பாபர் அசாமுடைய விளையாட்டில் உள்ள சிறப்பே அவர் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் ரன் சேர்த்து பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி அணிக்கு ரன் சேர்ப்பார். பாபர் அசாம் மீது நம்பிக்கை வையுங்கள் .அவருக்கு ஆதரவு தாருங்கள் என்று ரமிஸ் ராசா கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 17, 2022, 17:00 [IST]
Other articles published on Sep 17, 2022
English summary
Babar Azam facing the Virat kohli situation as Ramiz Raja comes in support கோலிக்கு வந்த அதே சிக்கல்.. வசமாக மாட்டி கொண்ட பாபர் அசாம்.. கிளாஸ் எடுத்த ரமிஸ் ராஜா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X