For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல ரசிகர்களே…!! பெருமைப்படுங்க… ! தோனியின் க்ளவுசில் இருக்கும் இதை கவனிச்சீங்களா..?

Recommended Video

WORLD CUP 2019 IND VS SA | Dhoni gloves | தோனியும் க்ளவுசும். தொடரும் விவாதங்களும் சர்ச்சைகளும்

சவுதாம்ப்டன்:தல தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளவ்சில் காணப்பட்ட குறீயீடு, சமூக வலை தளங்களில் ஹிட்டடித்து இருக்கிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்ப'ரிக்காவுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டி நேற்று சவுதாம்ப்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடிமால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களின் முடிவில் 230 ரன்களை எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹிட் மேன் ரோகித் ஷர்மா 122 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த உலக கோப்பை தொடரின் முதல் சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றார்.

இவர் தொடங்க... அவர் ஆட... பாண்டியா முடித்து வைக்க... ஆஹா..! என்ன ஒரு கூட்டு முயற்சி..! குஷியில் கோலி இவர் தொடங்க... அவர் ஆட... பாண்டியா முடித்து வைக்க... ஆஹா..! என்ன ஒரு கூட்டு முயற்சி..! குஷியில் கோலி

வைரலான விஷயம்

அவருக்கும், இந்திய அணிக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முதல் போட்டியில் வெற்றி என்பதால் உலக கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தான் என்று ரசிகர்களும் குஷியில் இருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் இந்திய அணி முதல் வெற்றி பற்றியே பேச்சாக இருக்கும் நிலையில் ஒரு விஷயம் வைரலாகி இருக்கிறது.

கவனிக்கப்பட்ட குறியீடு

அது வழக்கம் போல.... தல தோனி விவகாரம் தான். அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய க்ளவ்சும், அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு குறியீடும் தான். க்ளவ்சில் இருக்கும் குறியீடு ஒன்றை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ராணுவ முத்திரை

ராணுவ முத்திரை

அந்த க்ளவ்சில் இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை பதிக்கப் பட்டிருக்கிறது. ராணுவத்துக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு... அந்த குறியீட்டை க்ளவ்சில் அணிந்து தல விளையாடி இருக்கிறார் என்று ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். தோனி இந்திய ராணுவத்தில் எல்.டி கார்னல் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையும் வந்தது

சர்ச்சையும் வந்தது

இப்போது மட்டுமல்ல.... பல முறை தோனியின் கையுறை பற்றிய பேச்சுகள் கிரிக்கெட் உலகில் வலம் வந்திருக்கின்றன. அவற்றில் பல ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில குறிப்பீடுகள் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

ஹீலி புகார்

ஹீலி புகார்

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.... 2008ம் ஆண்டு முத்தரப்பு தொடரின் 10வது லீக் போட்டி சிட்னியில் நடந்தது. அதில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் விளாசிய பந்தை, தோனி அருமையாக டைவ் அடித்து கேட்ச்சாக்கினார். அப்போது நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கீப்பர் இயன் ஹீலி, புகார் ஒன்றை கூறினார்.

இடைவெளி இல்லை

இடைவெளி இல்லை

அதாவது... தோனியின் க்ளவுஸ் இருக்கிறது என்பதாகும். பொதுவாகவே விக்கெட் கீப்பரின் க்ளவுசில் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் நன்கு இடைவெளியிருக்க வேண்டும். ஆனால் தோனியின் க்ளவுசில் இடைவெளி இல்லாமல் தையல் போடப்பட்டிருந்தது.

விதிகளுக்கு புறம்பானது

விதிகளுக்கு புறம்பானது

இது ஐசிசி விதிமுறை 40.2 இன் கீழ் தவறு. இதையடுத்து போட்டி நடுவர் ஜெவ் குரோவ் உத்தரவின் பேரில், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே புதிய க்ளவுசுக்கு மாற்றினார் தோனி. அதன் காரணமாக... தண்டனையிலிருந்து இருந்தும் தப்பினார்.

Story first published: Thursday, June 6, 2019, 11:24 [IST]
Other articles published on Jun 6, 2019
English summary
Balidan symbol on dhonis gloves makes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X