For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப் பாவமே.. மோசமான ஸ்கோர்களிலேயே இதுதான் மகா மோசமாமே!

Recommended Video

ஒரே தொடரில் வங்கதேசத்தின் பல மோசமான சாதனைகள்- வீடியோ

ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மகா மட்டமான ஸ்கோரை எடுத்துள்ளது வங்கதேசம்.

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 43 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கெமர் ரோச் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நான் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து 158 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

மோசமான ஸ்கோரில் சாதனை

மோசமான ஸ்கோரில் சாதனை

நேற்று வங்கதேசம் எடுத்த 43 ரன்கள்தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி எடுத்த மிக மிக குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக அந்த அணி இலங்கை அணிக்கெதிராக 2007 ஆம் ஆண்டு 62 ரன்களை எடுத்ததே அந்த அணியின் குறைந்த பட்சமாகும்.

இந்தியா 42

இந்தியா 42

அதேசமயம், நம்ம இந்தியா இதில் முன்னோடியாக்கும். இந்திய அணி 1974 ஆம் ஆண்டு குவித்த 42 ரன்களுக்கு பிறகு இதுவே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீசில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அடிக்கப்பட்ட குறைந்த ஸ்கோரும் இதுவேயாகும்.

46 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

46 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

இதற்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் ணி, 1994ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை 46 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது.

கெமர் ரூச் அசத்தல்

கெமர் ரூச் அசத்தல்

இந்த போட்டியில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம்,வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் ஒரு புதிய சாதனை செய்துள்ளார். அவர் 12 பந்துகள் இடைவெளியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கு முன்னால் இதே சாதனையை மான்டே நோபல் (1902) மற்றும் காலிஸ் (2002) செய்தது குறிப்பிடத்தக்கது. நோபல் இங்கிலாந்து அணிக்கெதிராகவும் , காலிஸ் வங்கதேச அணிக்கெதிராகவும் இந்த சாதனையை படைத்தனர்.

குறைந்த பந்துகளில்

குறைந்த பந்துகளில்

வங்கதேச அணி நேற்றைய போட்டியில் 112 பந்துகளில் ஆல் அவுட் ஆனது (18.4 ஓவர்கள்). இது இன்னொரு சாதனையாகும். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணிக்கெதிராக 111 பந்துகளில் (18.3 ஓவர்கள்) ஆல் அவுட் ஆனதே சாதனையாக இருந்து வருகிறது.

முட்டையோ முட்டை

முட்டையோ முட்டை

மேலும் நேற்று ஏகப்பட்ட முட்டைகள் வேறு. டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். இப்படி வெளியேறுவது இது ஆறாவது முறையாகும்.

Story first published: Thursday, July 5, 2018, 10:40 [IST]
Other articles published on Jul 5, 2018
English summary
Bangadesh have taken a very pathetic low score in the test match against WI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X