For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 ரன்களில் 5 விக்கெட் இழந்த வங்கதேசம்.. த்ரில் வெற்றி பெற்றது எப்படி.. இந்தியாவுக்கு வில்லனான ராகுல்

டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ,இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்கதேச அணி 1க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 4 ஆல்ரவுண்டர்களை கொண்டு களமிறங்கியது. இதனையடுத்து களமிறங்கிய ஷிகர் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

இரட்டை சதம் விளாசி ருத்துராஜ் கலக்கல்.. இந்திய அணியில் இடம் கிடைக்காது - அஸ்வின் சொன்ன பகீர் காரணம் இரட்டை சதம் விளாசி ருத்துராஜ் கலக்கல்.. இந்திய அணியில் இடம் கிடைக்காது - அஸ்வின் சொன்ன பகீர் காரணம்

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். . ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன் காரணமாக இந்திய அணி 41.2 வது ஓவரில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.

 வங்கதேசம் தடுமாற்றம்

வங்கதேசம் தடுமாற்றம்

முதல் பந்திலேயே நஜிமுல் ஷாண்டோ டக் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வங்கதேச வீரர்களும் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினர். அனாமுல் ஹக் 14 ரன்களிலும், பொறுப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 41 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.ஒரு கட்டத்தில் ஷகிபுல் ஹசன் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார். அப்போது வாசிங்டன் சுந்தர் வீசிய பந்தை வேகமாக அடித்த போது, விராட் கோலி கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

வங்கதேச அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட மகமுதுல்லா 14 ரன்களிலும், முஸ்பிகுர் ரஹிம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எபதாட் ஹுசைன்,ஹசன் மகமுத் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாக, வங்கதேச அணி 8 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

கடைசியில் மெஹதி சிக்சர், பவுண்டரி அடித்ததால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. அப்போது , மெஹதி ஹசன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கேஎல் ராகுல் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்டு கடைசி விக்கெட்டுக்கு மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஜோடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, December 4, 2022, 19:51 [IST]
Other articles published on Dec 4, 2022
English summary
Bangladesh beat india by 1 wicket and lead the series 1-0 8 ரன்களில் 5 விக்கெட் இழந்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி.. த்ரில் வெறி பெற்றது எப்படி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X