For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர் குழு.. மன்னிப்பு கேட்டு போராட்டம்

டெல்லி : வங்கதேச ஹேக்கர் குழு ஒன்று, விராட் கோலியின் இணையதளம் என நம்பப்படும் ஒரு தளத்தை முடக்கியுள்ளனர். அவர்கள் ஏதோ பொழுதுபோக்குக்கு இதை செய்யவில்லை. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பை எதிர்த்து இப்படி செய்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல், ஐசிசி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை தாங்கள் தொடர்ந்து இது போல தளங்களை முடக்குவோம் என கூறியுள்ளனர்.

விராட் கோலியின் இணையதளத்தில் "காலரி" என்கிற புகைப்படங்கள் பகுதியில், மூன்று படங்களை இணைத்துள்ளனர் இந்த ஹேக்கர்கள். "சைபர் செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ்" என்ற ஒரு ஹேக்கர் குழு இந்த வேலையை செய்துள்ளது.

லிட்டன் தாஸ் அவுட் ஆன காட்சிகள்

லிட்டன் தாஸ் அவுட் ஆன காட்சிகள்

அதில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஸ்டம்பிங் செய்யப்படும் காட்சியை புகைப்படங்களாக இணைத்துள்ளனர். லிட்டன் தாஸ் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தார். மற்ற வங்கதேச வீரர்கள் தடுமாறிய போதும், அவர் துவக்கத்தில் இருந்து நீண்ட நேரம் களத்தில் நின்றார். 117 பந்துகளில் 121 ரன்கள் அடித்த அவர், தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் அவுட் கொடுக்கப்பட்டார்.

அம்பயர் அளித்தது தவறான தீர்ப்பா?

அம்பயர் அளித்தது தவறான தீர்ப்பா?

லிட்டன் தாஸின் அவுட் முடிவு மூன்றாம் அம்பயரிடம் சென்ற போது, லிட்டன் தாஸின் கால் நுனி சிறிதளவு கிரீசை தொட்டது போல இருந்தது. ஆனால், வீடியோவில் தெளிவாக தெரியவில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் பேட்ஸ்மேன் பக்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அன்று அவுட் கொடுத்தார் மூன்றாம் அம்பயர்.

என்ன செய்துள்ளது ஹேக்கர் குழு?

என்ன செய்துள்ளது ஹேக்கர் குழு?

இந்தியா அந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தடுமாறினாலும், கடைசி பந்தில் வெற்றி பெறவே, வங்கதேசம் பெருத்த ஏமாற்றம் அடைந்தது. அதன் விளைவாகவே இந்த ஹேக்கர் குழு இந்த காரியத்தை செய்துள்ளது. இந்த குழு இணைத்துள்ள மூன்று புகைப்படங்களில் ஒன்றில் லிட்டன் தாஸ் அவுட் கால் கிரீசில் தொட்டது போன்ற சந்தேகமுள்ள காட்சியும், அடுத்த புகைப்படத்தில் ஹேக்கர் குழுவின் அடையாளங்களும், மூன்றாம் படத்தில் ஐசிசி-க்கு ஒரு செய்தியும் இருக்கிறது.

ஐசிசி-க்கு மன்னிப்பு கோர வேண்டும்

ஐசிசி-க்கு மன்னிப்பு கோர வேண்டும்

அந்த செய்தியில், "அன்புள்ள ஐசிசி, கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு இல்லையா? அனைத்து அணிகளுக்கும் சரி நிகர் உரிமை இல்லையா? இது (லிட்டன் தாஸ் ஸ்டம்பிங்) எப்படி அவுட் ஆகும் என சொல்லுங்கள்? நீங்கள் மொத்த உலகத்திடமும் மன்னிப்பு கேட்டு, அந்த நடுவரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீங்கள் எத்தனை முறை இணையதளத்தை மீட்டாலும், நாங்கள் அத்தனை முறையும் உங்கள் தளத்தை முடக்குவோம். மேலும், எங்கள் இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை எந்த விதத்திலும் அவமதிக்க நினைக்கவில்லை. தயவுசெய்து சிந்தியுங்கள், உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி இழைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு தேசிய அணியும் விளையாட்டில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். கடைசி வரை நாங்கள் போராடுவோம்" என பதிவிடப்பட்டுள்ளது.

அட ஹேக்கர் குழுவே!! ஏன்பா இப்படி நேரத்தை வீணாக்கிகிட்டு இருக்கீங்க?

Story first published: Tuesday, October 2, 2018, 19:12 [IST]
Other articles published on Oct 2, 2018
English summary
Bangladeshi fans hacked Virat Kohli website and asks apology from ICC for wrong stumping decision by Umpire.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X