அவுட் என கையை தூக்கி.. அம்பயர் செய்த காரியம்.. விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்!

சிட்னி : ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஷ் லீக்கில் நடந்த டி20 போட்டியில் அம்பயர் பயங்கர காமெடி ஒன்றை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

ஒரு முறை அவுட் என கையை தூக்கிய அவர், பின் மனதை மாற்றிக் கொண்டு மூக்கை தேய்த்துக் கொண்டார்.

அந்த காட்சி பெரும் சிரிப்பை வரவழைத்தது. அவுட் கேட்ட பந்துவீச்சாளர் ரஷித் கான் தான் இதைக் கண்டு சற்றே அதிர்ச்சி அடைந்தார்.

பிபிஎல் டி20 லீக்

பிபிஎல் டி20 லீக்

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையே நடைபெற்ற பிபிஎல் டி20 லீக் போட்டியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. அம்பயர் கிரெக் டேவிட்சன் தான் அந்த வேலையை செய்தது.

17வது ஓவரில் என்ன நடந்தது?

17வது ஓவரில் என்ன நடந்தது?

ரெனிகேட்ஸ் அணி சேஸிங் செய்த போது, 17 வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. ரஷீத் கான் ஒரு எல்பிடபிள்யூ அவுட் கேட்டு முறையிட்டார். அம்பயர் விரலை உயர்த்தத் தொடங்கினார்.

அம்பயர் மனம் மாறினார்

அம்பயர் மனம் மாறினார்

உடனே பேட்ஸ்மேன் பியூ வெப்ஸ்டர் நடக்க ஆரம்பித்தார். ரஷீத் கானும் கொண்டாடத் தொடங்கினார். இருப்பினும், அவருக்குப் பின்னால், அம்பயர் மனம் மாறி, மூக்கின் கீழ் விரலை வைத்து தேய்த்தார்.

ரஷித் கான் அதிர்ச்சி

ரஷித் கான் அதிர்ச்சி

இதை அறியாமல் சிறிது நேரம் விக்கெட் விழுந்ததாக குஷியில் இருந்த ரஷித் கான் என்ன நடந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியில் திரும்பினார். அம்பயர் அவரிடம் அதற்கு விளக்கம் கூறினார்.

ரஷீத் கான் ஆட்டநாயகன்

ரஷீத் கான் ஆட்டநாயகன்

இறுதியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இந்தப் போட்டியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெப்ஸ்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாக சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.

அதிர்ச்சியடைந்தேன்

போட்டிக்கு பின் அந்த நகைச்சுவை தருணம் குறித்து ரஷீத் கானிடம் கேட்கப்பட்டது. "நான் எனது கொண்டாட்டத்தையும் தொடங்கினேன், நடுவர் முடிவை மாற்றியதால் நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று கூறினார் ரஷித் கான்.

1997இல் நடந்த சம்பவம்

1997இல் நடந்த சம்பவம்

1997 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் அஜய் ஜடேஜா இதே போல அம்பயரிடம் தப்பி இருக்கிறார். அந்தப் போட்டியின் அம்பயர் ராமன் சர்மா கையை தூக்கி, பின் அவர் தனது தொப்பியை சரிசெய்து அவுட் கொடுக்காமல் தவிர்த்து சமாளித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BBL 09 : Umpire Greg Davidson rubbing his nose midway, before he decided against LBW.
Story first published: Sunday, December 29, 2019, 19:19 [IST]
Other articles published on Dec 29, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X