For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாருக்கு பிசிசிஐ கெடு.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்வுக்குழு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா,புவனேஸ்வர் குமார் மற்றும் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 டி20 மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது.

இதில் 2 வகையான இந்திய அணியை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்துவாரா ?அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்துவாரா ?

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

இதில் ஆஸ்திரேலிய தொடரில் ஆர்ஸ்தீப் சிங்கும், தென்னாப்பிரிக்க தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியாவும் தேர்வாகவில்லை. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் அதற்கான காரணம் என்ன என்று தெரியவந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

அவசர அழைப்பு

அவசர அழைப்பு

அதற்கு, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் காயத்தை மறைத்து கொண்டு விளையாடியது தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அந்த தவறு மீண்டும் நடைபெறாமல் இருக்கு பிசிசிஐ தற்போது ஒரு திட்டத்தை திட்டியுள்ளது. அதன் படி, ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட ஆர்ஸ்தீப் சிங், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

அவருக்கு அங்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு, பின்னர் அவருக்கு உடல் தகுதியை சீராக வைத்து கொள்வதற்காகவும், இனி வரும் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கான சிறிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதே போன்று தென்னாப்பிரிக்க தொடரின் போது ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாருக்கும் பெங்களுருவில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வீரர்களுக்கு சிகிச்சை

வீரர்களுக்கு சிகிச்சை

இதில் மைனஸ் 25 டிகிரி வரை உள்ள குளிரூட்ட அறையில் ஓய்வு எடுப்பது போன்ற சிறப்பு வசதியும் வீரர்களுக்கு வழங்கப்படும்.இதன் மூலம், வீரர்களின் தசைகள் சீராகும். மேலும் 3 வீரர்களுக்கு உடல் மசாஜ் தினமும் செய்யப்படும். இதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு 3 பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்லும்.

Story first published: Tuesday, September 13, 2022, 14:55 [IST]
Other articles published on Sep 13, 2022
English summary
BCCI asks 3 star bowlers for conditioning work ahead of t20 world cup ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாருக்கு பிசிசிஐ கெடு.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்வுக்குழு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X