For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பைக்கு பின்னர் பிசிசிஐ கழற்றிவிடும் 2 வீரர்கள்..?? முக்கிய வீரருக்கும் கேட் பாஸ் ரெடி

லண்டன்: உலக கோப்பை தொடர் அரையிறுதியை நெருங்கி இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக தொடர் முடிந்த பின்னர், 2 வீரர்களை அணியில் இருந்து கழற்றிவிட பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

நடப்பு உலக கோப்பையில் இந்தியா அரையிறுதிக்குள் எளிதாக நுழைந்து விட்டது. ரோகித் சர்மாவின் அதிரடியான சதங்கள், பும்ராவின் சிறந்த பந்துவீச்சு ஆகியவற்றை அதற்கு முக்கிய காரணங்களாக கூறலாம்.

இது ஒரு புறம் இருக்க, உலக கோப்பைக்கான இந்திய அணியில் எதற்காக எடுக்கப்பட்டோம் என்று தெரியாமலேயே சில வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை உலக கோப்பை முடிந்தவுடன் அணியில் இருந்து கழற்றிவிட பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

அதில் 2 முக்கிய வீரர்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவர் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ். மற்றொருவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். அந்த வகையில் உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப் பட உள்ள அவர்களை பற்றி பார்க்கலாம்.

2017 முதல்

2017 முதல்

அவர்களில் முதலில் கைகாட்டப்படுபவர் கேதர் ஜாதவ். உலக கோப்பைக்கு பின் கட்டாயம் அணியில் இருக்க மாட்டார் என்பது ரசிகர்களின் கருத்து. அவர் 2017ம் ஆண்டு முதல் அணியில் விளையாடி வருகிறார். அணிக்குள் எப்படி என்பது வந்தார் என்பதே இன்னும் புரியாத புதிர்.

6வது பவுலர்

6வது பவுலர்

ஆரம்ப கட்ட கிரிக்கெட் வரலாறு அவருக்கு ஏதோ கை கொடுத்தது என்று கூறலாம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தனது வித்தியாசமான பந்துவீச்சால் 6வது பவுலராக அடையாளம் காணப்பட்டார்.

சொதப்பலோ, சொதப்பல்

சொதப்பலோ, சொதப்பல்

அதன் பின் எல்லாமே சுத்த சொதப்பல் ரகம் தான். ஆனாலும், அவர் தொடர்ந்து அணிக்குள் இருந்து வருகிறார். தற்போதைய உலககோப்பையில் ஒரேயொரு அரை சதம் அடித்தார். பந்துவீச்சும் எடுபடவில்லை. கடைசியாக இங்கிலாந்து அணிக்கெதிரான இவரின் ஆட்டம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அதன் விளைவாகவே அணியிலிருந்து நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப் பட்டார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

எனவே உலக கோப்பை தொடருக்கு பின் அணி நிர்வாகம் கழட்டி விட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நீக்கப்படுபவர்கள் என்ற பட்டியலில் 2வது இடம்பிடித்தவர் டிகே என்று செல்லமாக அழைக்கப் படும் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடும் இவர் இப்போது தான் முதலாவது உலககோப்பை போட்டியிலேயே அறிமுகமாகியுள்ளார்.

சந்தேகம் தான்

சந்தேகம் தான்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். அந்த போட்டியில் அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதே போல் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கூட கிடைக்க வில்லை. அரையிறுதியில் விளையாடுவது சந்தேகம் தான்.

Story first published: Sunday, July 7, 2019, 17:14 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
Bcci plan to skip 2 important players after the world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X