For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் இருந்து விலகுகிறார் கேதர் ஜாதவ்.. மாற்று வீரர்களாக 5 பேருக்கு வாய்ப்பு.. ஒரு அலசல்

மும்பை: உலக கோப்பை தொடருக்குள் கேதர் ஜாதவ் குணமடைவது சற்று கடினம் என்று கூறப்படுவதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக யாரை களம் இறக்குவது என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு அடிக்கப்பட்ட பந்தை பிடிக்க முயற்சித்து தோள்பட்டையில் கடும் காயம் ஏற்பட்டு வெளியேறினார் கேதர் ஜாதவ். விரைவில் இவர் குணமடைய மாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கப்பட்டார்.

உலக கோப்பை தொடருக்குள் அவர் குணமடைவது சற்று கடினம் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் யாருக்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

துணை கேப்டனாக கெயில் நியமனம்.. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிரடி.. இனி எல்லாம் ஜெயம் துணை கேப்டனாக கெயில் நியமனம்.. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிரடி.. இனி எல்லாம் ஜெயம்

ஐபிஎல்லில் அபாரம்

ஐபிஎல்லில் அபாரம்

33 வயதான ராயுடு 2013ம் ஆண்டு இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடினார். அதன்பிறகு சில போட்டிகளை அவர் தவறவிட்டாலும், 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

வாய்ப்புகள் அதிகம்

வாய்ப்புகள் அதிகம்

4வது வீரராக யாரை களம் இறக்குவது என்ற பிரச்னைக்கு இவர் தீர்வாக இருப்பார் என்று அப்போது பேசப்பட்டது. 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 47. கேதர் ஜாதவ் குணமடையாவிட்டால் அவருக்கு அந்த இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 684 ரன்கள் அடித்து விளாசியதன் மூலம் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டெஸ்ட் போட்டிகளில் நன்கு ஆடினார். ஒரு நாள் போட்டிகளில் அவுட் ஆப் பார்மில் இருந்ததால் 11 பேர் கொண்ட அணியில் இடம் இல்லாமல் தடுமாறினார். நடுத்தர ஓவர்களில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் அவருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

டெல்லியின் கேப்டன்

டெல்லியின் கேப்டன்

ஐபிஎல் தொடரில் தற்போதைய டெல்லி அணியின் கேப்டன். டெல்லி அணியை 7 வருடங்களுக்குப் பிறகு பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதே போல் பேட்டிங்கில் 442 ரன்கள் விளாசி இருக்கிறார்.

210 ரன்கள் குவிப்பு

210 ரன்கள் குவிப்பு

2017ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமானவர். ஷ்ரேயாஸ் அய்யர், ஆடிய 6 ஒருநாள் போட்டிகளில் 210 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சமீபத்திய ஆட்டங்கள், டெல்லி அணியின் கேப்டன் ஆகியவற்றின் அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாம்.

அடுத்தடுத்து அரைசதங்கள்

அடுத்தடுத்து அரைசதங்கள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆடிய மனிஷ் பாண்டே கடந்த சீசனில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்தில் களம் இறங்கினார். அந்த சீசன் இவருக்கு மிகவும் மோசமாக அமைந்தது. ஆனால் நடப்பு சீசனில் தொடக்கத்தில் சொதப்பிய பாண்டே, அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.

கவனம் பெற்றார்

கவனம் பெற்றார்

2015ம் ஆண்டு இந்திய அணிக்காக முதலில் அறிமுகமாகிய பாண்டே அவ்வப்போது வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரை சதம் மற்றும் சதம் என அடுத்தடுத்து அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தை கருத்தில் கொண்டு உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறலாம்.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

19 வயதுக்குட்பட் டோருக்கான உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட சிறப்பாக ஆடினார். அதேபோல் நடப்பு சீசனிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலையாக இல்லாமல் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டதால் சிறப்பாக ஆடவில்லை. துவக்க வீரராக களம் இறக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து அசத்தினார்.

துடிப்பான வீரர்

துடிப்பான வீரர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 2 போட்டிகள் மட்டுமே விளையாடினார். ஆனால் பெரிதாக எதுவும் சோபிக்கவில்லை. துடிப்பான வீரர் என்பதால் அவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Story first published: Tuesday, May 7, 2019, 13:51 [IST]
Other articles published on May 7, 2019
English summary
Kedar Jadhav not to play in IPL playoffs due to a shoulder injury and bcci plans to select another player in WC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X