For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தவறை ஒப்புக்கொண்ட கங்குலி... பிசிசிஐ-க்கு வந்த இக்கட்டான சூழல்.. காரணம் என்ன தெரியுமா?

பெர்மிங்கம்: இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு தரப்படுவது குறித்து கங்குலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடர் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த டிராவிட்.. இது வேற லெவல் ஆச்சரியம்.. கில்கிறிஸ்ட் போல் மாறும் பண்ட்எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த டிராவிட்.. இது வேற லெவல் ஆச்சரியம்.. கில்கிறிஸ்ட் போல் மாறும் பண்ட்

வெஸ்ட் இண்டீஸ் டூர்

வெஸ்ட் இண்டீஸ் டூர்

இந்த தொடர் வரும் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

இந்தாண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன் என மாற்றினால் இந்திய அணியின் எதிர்காலம் என்ன ஆகும், வீரர்களின் புரிதல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பிசிசிஐ இதற்கு நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் எனக்கோரிக்கை வலுத்து வருகிறது.

கங்குலியின் விளக்கம்

கங்குலியின் விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார் அதில், "இவ்வளவு குறுகிய நாட்களில் 7 கேப்டன்களை மாற்றியது சிறந்த முடிவல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் இது நடந்துவிட்டது. இதுதான் உண்மையான காரணம்.

பிரச்சினை எங்கு?

பிரச்சினை எங்கு?

தென்னாப்பிரிக்கவுடனான தொடரில் ரோகித் சர்மா கேப்டன்சி செய்ய தயாராக இருந்த போது காயமடைந்தார். இதனால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் கே.எல்.ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

டிராவிட்டின் பரிதாபம்

டிராவிட்டின் பரிதாபம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு கொரோனா வந்ததற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. இப்படி கேப்டன்கள் மாற்றபட்ட போது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் நிலைமை தான் கவலையளிக்கிறது. புது புது கேப்டன்களுடன் அவர் பணியாற்றி வருவது மிகவும் இக்கட்டான சூழலாகும் என கங்குலி கூறினார்.

Story first published: Saturday, July 9, 2022, 20:11 [IST]
Other articles published on Jul 9, 2022
English summary
Sourav ganguly opens up on Captaincy changes ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் ) இந்திய அணியில் தொடர்ச்சியாக கேப்டன்கள் மாற்றப்படுவது குறித்து கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X