சோதிக்காதீங்கடா எங்கள... கெஞ்சுகிறது பிசிசிஐ

Posted By:

டெல்லி: நாடா எனப்படும் தேசிய ஊக்கமருத்துக்கு எதிரான அமைப்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சோதனை நடத்துவதாக இருந்தது. இதற்காக அனுமதி வேண்டி அந்த அமைப்பு பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்த கடிதத்துக்கு தற்போது பிசிசிஐ பதில் அனுப்பி இருக்கிறது. அதன்படி இந்திய வீரர்களை 'நாடா' அமைப்பு சோதனை செய்வதை அனுமதிக்க முடியாது என் கூறியிருக்கிறது.

ஆனால் பிசிசிஐ சொன்ன பதிலை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் நாடா இந்திய வீரர்களை சோதனை செய்தே தீருவேன் என கண்டிப்பாக இருக்கிறது.

 நாடாவின் வேண்டுகோள்

நாடாவின் வேண்டுகோள்

இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மீது ஊக்கமருந்து மற்றும் போதை மருந்து சோதனை நடத்தும் அமைப்புதான் நாடா. தேசிய ஊக்கமருத்துக்கு எதிரான அமைப்பான இது முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் சோதனை நடத்த முடிவு செய்து இருந்தது. இதற்காக அந்த அமைப்பு பிசிசிஐ, விளையாட்டு துறை என பல இடைகளில் அனுமதி கேட்டு இருந்தது.

 மறுப்பு தெரிவித்த பிசிசிஐ

மறுப்பு தெரிவித்த பிசிசிஐ

ஆனால் நாடாவின் எந்த வேண்டுகோளுக்கும் பிடி கொடுக்காமல் பேசி வந்தது பிசிசிஐ. இந்த நிலையில் தற்போது பிசிசிஐ தனது நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் தெளிவாக்கி இருக்கிறது. அதில் ''இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஊக்கமருந்து சோதனை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே பிசிசியிடம் இருக்கும் ஊக்கமருந்து சோதனை குழுவே நல்ல கண்டிப்போடுதான் இருக்கிறது. ஆகவே நாடாவின் சோதனை அவசியமில்லை'' என்று கூறியது.

 நாடா பிடிவாதம்

நாடா பிடிவாதம்

இந்த நிலையில் தற்போது இந்த விஷயத்தை நாடா முடிவுக்கு கொண்டு வராமல் மீண்டும் விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறது. அதன்படி ''அகில உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் வேண்டுகோளின்படி நாங்கள் அனைத்து விளையாட்டு வீரர்களையும் சோதனை செய்ய வேண்டும். ஆகவே பிசிசிஐ கண்டிப்பாக இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கேட்டது.

 சேவாக் கூட்டணி

சேவாக் கூட்டணி

இந்த பிரச்சனை மிகவும் பெரிய அளவில் சென்று கொண்டிருக்கும் இதே சமயத்தில் புதிய திருப்பம் ஒன்றும் நடந்து இருக்கிறது. அதன்படி நாடா அமைப்பில் உறுப்பினராக சேவாக் சேர்ந்து இருக்கிறார். ஊக்கமருந்துக்கு எதிரான கட்டுப்பாட்டு குழுவில் இருக்கிறார். எல்லா ஊக்கமருந்து குற்றச்சாட்டும் இவரை தாண்டித்தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குழுவில் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்.

Story first published: Friday, November 10, 2017, 17:11 [IST]
Other articles published on Nov 10, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற