கிரிக்கெட் வீரர் யூசப் பதான் சஸ்பென்ட்: தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக பிசிசிஐ அதிரடி!

Posted By:

டெல்லி: கிரிக்கெட் வீரர் யூசப் பதானை பிசிசிஐ 5 மாதங்கள் சஸ்பென்ட் செய்துள்ளது. தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்திய புகாரில் பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

கிரிக்கெட் வீரர் யூசப் பதான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக அவர் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி டி20 போட்டியின் போது அவரது சீறுநீரை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

இருமல் மருந்தால் வந்த வினை

இருமல் மருந்தால் வந்த வினை

இதில் அவர் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை ஊசி மூலம் எடுத்துக்கொண்டதாக புகார் கூறப்பட்டது.

யூசப் பதான் விளக்கம்

யூசப் பதான் விளக்கம்

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த யூசப் பதான் அந்த இருமல் மருந்து தடை செய்யப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றார்.

விசாரணையில் நிரூபணம்

விசாரணையில் நிரூபணம்

தெரியாமல் தான் அந்த இருமல் மருந்தை உட்கொண்டதாக அவர் கூறினார். மேலும் அவருக்கு அறிவுறுத்திய இருமல் மருந்துக்கு பதிலாக தடை செய்யப்பட்ட மருந்தை கொடுத்ததும் நிரூபணமானது.

5 மாதங்கள் சஸ்பென்ட்

5 மாதங்கள் சஸ்பென்ட்

இந்நிலையில் யூசப் பதானின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ அவருக்கு 5 மாதம் தடைவிதித்து உத்தரவிட்டது. அனைத்து ஆதாரங்களையும் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

பரோடாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான யூசப் பதான் பிசிசிஐயின் தடையால் உள்ளூர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழப்பார் என தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Story first published: Tuesday, January 9, 2018, 14:49 [IST]
Other articles published on Jan 9, 2018
Please Wait while comments are loading...