For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ரத்து? மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ.. காரணம் என்ன

சென்னை: இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

உலக நாடுகளை அச்சுறுத்தும் உருமாறிய Coronavirus.. Ind vs SA series நடக்குமா?

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் வரும் டிசம்பர் 8ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக தான் இந்திய சீனியர் வீரர்களுக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம் ரத்து?

சுற்றுப்பயணம் ரத்து?

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் ரத்தாகும் சூழல் உருவாக்கியுள்து. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று உருவாகியுள்ளது. - B.1.1.529 என்ற அந்த கொரோனா வைரஸானது தற்போது வேகமாக நாடு முழுவது பரவி வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மிகப்பெரும் தொடர்

மிகப்பெரும் தொடர்

இந்திய அணி மொத்தம் 7 வாரங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்து விளையாடவுள்ளது. எனவே அதற்குள் இந்திய வீரர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் சிரமமாகிவிடும் என பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக தற்போது அதிக பாதிப்புகளை கொண்டுள்ள ஜோஹனெஸ்பர்க் மற்றும் ப்ரீடோரியா நகரங்களில் தான் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலும் பயம் கூடியுள்ளது.

நாடு திரும்பும் வீரர்கள்

நாடு திரும்பும் வீரர்கள்

இது ஒருபுறம் இருக்க தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய ஏ அணி வீரர்களையே திரும்பி நாட்டிற்கு அழைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் அதிகாரப்பூர்வமற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம்.

பிசிசிஐ அதிகாரி

பிசிசிஐ அதிகாரி

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்காவில் தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது என்பது தெரியாமல் தற்போதைக்கு எதையும் கூற முடியாது. இந்திய வீரர்கள் டிசம்பர் 8 அல்லது 9ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டுவிடும் என கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்திய வீரர்கள் செல்லும் எனத்தெரிகிறது.

Story first published: Friday, November 26, 2021, 20:50 [IST]
Other articles published on Nov 26, 2021
English summary
BCCI waits central government’s decision for Indian team tour of south africa, after new covid 19 spread
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X