கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு டும்..டும்..டும்... 23ம் தேதி காதலியை மணக்கிறார்!

Posted By:

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ் குமார் தனது காதலியை நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்கிறார். இந்த திருமணம் டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது .

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும், நுபுர் நாகர் என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டாபர் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த பெண்ணை அவர் சில காலமாக காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Bhuvneshwar Kumar is going to marry his fiancee Nupur Nagar in Delhi

அவர் தனது காதலியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பார்த்து கமெண்ட் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடக்கும் அவர்கள் திருமணத்தில் இந்திய, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. டிசம்பர் 2ம் தேதி நடக்கும் இந்தியா, இலங்கை மோதும் போட்டியில் கலந்து கொள்ள மொத்த அணியும் டெல்லியில் இருக்கும். இதனால் அவர்கள் அனைவரும் திருமணத்திற்கு வருவார்கள் என கூறப்பட்டு இருக்கிறது.

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் புவனேஷ்வர் குமார், டிசம்பர் 2ம் தேதி நடக்கும் போட்டியில் கலந்து கொள்வதில் எந்த சந்தேகமும் இல்லை என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.

Story first published: Sunday, November 12, 2017, 10:31 [IST]
Other articles published on Nov 12, 2017
Please Wait while comments are loading...