For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

103 பந்துகளில் இஷான் கிஷன் 153 ரன்கள்.. வங்கதேசத்தை அலற விட்டார்.. சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை

சிட்டங்காங் : வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் 85 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் இஷான் கிஷன் களமிறங்கினார்.

ஷிகர் தவானும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷிகர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்து வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றினார்.

Fake Fielding விவகாரம்.. வங்கதேசத்திற்கு கிடுக்குப்பிடி போட்ட ஹர்ஷா போக்லே.. ஒரே கேள்வியால் டேமேஜ்Fake Fielding விவகாரம்.. வங்கதேசத்திற்கு கிடுக்குப்பிடி போட்ட ஹர்ஷா போக்லே.. ஒரே கேள்வியால் டேமேஜ்

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனையடுத்து, இந்திய அணியை மீட்கும் பொறுப்பு இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி தலை மீது விழுந்தது. வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் தோற்றதுக்கு காரணமே, டாப் வரிசை வீரர்கள் போதிய ரன்கள் அடிக்காமல், நல்ல தொடக்கத்தை கொடுக்காதது தான். ஆனால் இந்த போட்டியில் இஷான் கிஷன், எப்படி ஒருநாள் போட்டியில் விளையாட வேண்டும் என்று சீனியர்களுக்கு கிளாஸ் எடுத்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

வங்கதேச அணி, இந்த தொடரில் விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு எதாடர்ந்து நெருக்கடி கொடுத்தது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் தான் இஷான் கிஷன் வங்கதேசத்தை திருப்பி அடித்தார். தனது கவுண்டர் அட்டாக்கிங் அதிரடி ஆட்டத்தால், வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

தடுமாறிய வங்கதேசம்

தடுமாறிய வங்கதேசம்

எபதாட் ஹூசைன் போன்ற பவுலர்கள் ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷன், ஒரு கட்டத்தில் கூட வங்கதேச வீரர்களை ஆதிக்கம் செலுத்த விட வில்லை. 49 பந்துகளில் அரைசதம் கடந்த உடன் இஷான் கிஷன், ரன் அடிக்கும் சேகத்தை அதிகப்படுத்தினார். இஷான் கிஷனை கட்டுப்படுத்த வங்கதேச வீரர்கள் தடுமாறினர்.

150 ரன்கள்

150 ரன்கள்

85 பந்துகளில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டி சதத்தை இஷான் கிஷன் பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன், சிக்சர், பவுண்டிரிகளை விளாச, அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதன் முலம் 103 பந்துகளில் இஷான் கிஷன் 153 ரன்களை விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

Story first published: Saturday, December 10, 2022, 14:00 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Big century from Ishan kishan Puts Bangladesh put huge pressure 103
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X