For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் அணிக்கு உடனே தேவை டெஸ்ட் கிரிக்கெட்...கேப்டன் மிதாலி ராஜ்

மகளிர் கிரிக்கெட் அணிக்கு உடனே தேவை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் என்றார் கூறியிருக்கிறார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

By Devarajan

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உடனே தேவை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான். அப்போதுதான் அவர்கள் தங்களின் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இயலும் என்று கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் மிதாலி ராஜ் கூறுகையில், " டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் விளையாடும் பெண் வீரர்களுக்கு, மக்களின் மத்தியில் அறிமுகம் கிடைக்கும்.

 Captain Mithali Raj wants more Tests for indian women's cricket team

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் தான் அவர்களுக்கு உடனடி தேவை என நான் நினைக்கிறேன். அதுதான் அவர்களது பொறுமையை சோதித்து, மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும்.

கிரிக்கெட் ஆணையங்கள், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்லலாம். அது அனைவருக்கும் பழக்கமானது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது தரமான வீரர்களை உருவாக்கிட இயலும்." என்று குறிப்பிட்டார்.

முன்னதாக மிதாலி ராஜ் அளித்த பேட்டியொன்றில், மகளிர் அணிகளுக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். பல நாட்டு வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகளும் கலந்து பழகி, கிரிக்கெட் நுட்பங்களை அப்போதுதான் கற்றுக்கொள்ள இயலும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 27, 2017, 16:37 [IST]
Other articles published on Jul 27, 2017
English summary
Indian Captain Mithali Raj wants more Tests for women so that We can continue to produce Number one players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X