For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவா.. இது வேற லெவல்.. 131 பந்துகளில் 174 ரன்கள் விளாசிய புஜாரா.. தொடர்ந்து 2வது சதம்

ஹோவ்: ராயல் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சஸ்சக்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் புஜாரா தொடர்ந்து 2வது சதத்தை விளாசியுள்ளார்.

இதன் மூலம் புஜாராவுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கட்டையை போட்டு, பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றும் டெஸ்ட் வீரராக விளங்கி வந்த புஜாரா, இங்கிலாந்தில் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

ஆசிய கோப்பை - பும்ராவுக்கு பதில் யார் களமிறங்கலாம்.. பிளேயிங் லெவனில் 3 பேருக்கு இடையே போட்டிஆசிய கோப்பை - பும்ராவுக்கு பதில் யார் களமிறங்கலாம்.. பிளேயிங் லெவனில் 3 பேருக்கு இடையே போட்டி

முதல் சதம்

முதல் சதம்

இதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் வார்விக்சயர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சஸ்சக்ஸ் அணிக்காக புஜாரா களமிறங்கினார் 73 பநதுகளில் புஜாரா சதம் விளாசினார். அந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 22 ரன்கள் அடித்தும் அனைவரையும் புஜாரா ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மீண்டும் அதிரடி

மீண்டும் அதிரடி

இந்த நிலையில், இது எரிமலை போல் எப்போதாவது வெடிக்கும் ஆட்டம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், என்னை அப்படி தவறாக எடைப் போடாதீர்கள் என்று இன்று மீண்டும் சரவெடியை கொளுத்தி இருக்கிறார் புஜாரா. இன்று ஹோவ் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சஸ்சக்ஸ் அணியும், சர்ரே அணியும் மோதின.

வகுப்பு எடுத்த புஜாரா

வகுப்பு எடுத்த புஜாரா

இதில், டாஸ் வென்று சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சஸ்சக்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இரண்டு தொடக்க வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து புஜாரா மற்றும் டாம் கிளாக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்று இளம் வீரர்களுக்கு கிளாஸ் எடுத்தார்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

103 பந்துகளை எதிர்கொண்டு புஜாரா சதம் விளாசினார். அதன் பிறகு தான் அவர் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனைத் தொடர்ந்து அடுத்த 20 பந்துகளில் புஜாரா 53 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 131 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, 174 ரன்கள் விளாசினார். இதில் 20 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சஸ்சக்ஸ் அணி 50 ஓவர் முடிவில் 378 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Sunday, August 14, 2022, 21:01 [IST]
Other articles published on Aug 14, 2022
English summary
Cheteshwar Pujara hits 174 runs in 131 balls scored second consecutive century தலைவா.. இது வேற லெவல்.. 131 பந்துகளில் 174 ரன்கள் விளாசிய புஜாரா.. தொடர்ந்து 2வது சதம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X