For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்..... சூதாட்டத்திற்குக் கூப்பிட்டார் கிறிஸ் கெய்ன்ஸ்.. மெக்கல்லம் "ஷாக்" தகவல்

By Veera Kumar

லண்டன்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு, நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக, தற்போதைய நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் லண்டன் கோர்ட்டில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐபிஎல்) முன்னாள் சேர்மன் லலித் மோடி, மீதான அவதூறு வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளின் போது நியூசிலாந்து வீரர்கள் லஞ்சம் வாங்கியதாக அவர் கூறியதால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் சாட்சிகளாக நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம், முன்னாள் கேப்டன் பிளமிங், ஷேன் பாண்ட், ஆடம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்மதம் கேட்டார்

சம்மதம் கேட்டார்

இந்நிலையில், மெக்கல்லம் கோர்ட்டில் ஆஜராகி திடுக்கிடும் தகவல் ஒன்று குறித்து கூறியதாவது: 2008ம் ஆண்டு கொல்கத்தா ஹோட்டல் ஒன்றில் என்னை கிறிஸ் கெயின்ஸ் (நியூசி. முன்னாள் ஆல்-ரவுண்டர்) சந்தித்தார். அப்போது, ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட சம்மதமா என்று என்னிடம் கேட்டார்.

சகஜமப்பா

சகஜமப்பா

ஐபிஎல் போட்டிகளில் இது சகஜம். எல்லோரும் இதில் ஈடுபடுகிறார்கள். நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, ஜேக்கப் ஓரம் போன்றோரும் ஈடுபடுவதாக கூறி என்னை ஈர்க்க முயன்றார்.

போனிலும் கேட்டார்

போனிலும் கேட்டார்

பின்னர் ஒருமுறை போனில் தொடர்புகொண்ட்டு சம்மதமா என கேட்டார். இனிமேல் இதுபற்றி பேச வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால், விருந்து நிகழ்ச்சியொன்றில் மீண்டும் என்னிடம் வற்புறுத்தினார்.

ஏகப்பட்ட பணம்

ஏகப்பட்ட பணம்

சூதாட்டம் மூலம், 70 ஆயிரம் முதல் 2 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு பணம் கிடைக்கும். இதை வைத்து நியூசிலாந்தில் நிலம் வாங்கலாம் என்றெல்லாம் ஆசை காட்டினார். நான் சம்மதிக்கவில்லை. இவ்வாறு மெக்கல்லம் சாட்சியளித்துள்ளார். மேலும் கெயின்ஸ் தன்னை மிரட்டி பணியவைக்க முயலவில்லை என்றும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஹீரோக்களில் அவரும் ஒருவர் என்றும் மெக்கல்லம் தெரிவித்தார்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாக் கல்லீஸ், க்ளூசினர், அப்துல் ரசாக், ஆன்ட்ரூ பிளிண்டாப், சோயிப் மாலிக் போன்ற சிறந்த ஆல்-ரவுண்டர் வீரர்களில் கெயின்ஸ் ஒருவர். 2000வது ஆண்டில் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற வீரர்களில், இவரும் ஒருவர்.

Story first published: Friday, October 16, 2015, 13:10 [IST]
Other articles published on Oct 16, 2015
English summary
Former New Zealand captain Chris Cairns approached current skipper Brendon McCullum with a "business proposition" about match-fixing, McCullum told a London court on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X