For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு! கடைசியா ஆடுறதை பார்க்கணும் போல இருக்கா?

Recommended Video

Chris Gayle retirement: ஓய்வு முடிவை அறிவித்தாா் சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெய்ல்- வீடியோ

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பை 2019 தொடர் தான் கிறிஸ் கெயில் ஆடும் கடைசி ஒருநாள் தொடராக இருக்கும். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடவுள்ளார் கெயில்.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

கிறிஸ் கெயில் கடைசியாக ஜூலை 2018இல் வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடினார். அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுவதை தவிர்த்து வந்தார். சில டி20 போட்டிகளில் மட்டும் ஆடினார். இடையே ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் டி10 லீக் ஆகியவற்றில் மட்டுமே பங்கேற்றார்.

2015 உலகக்கோப்பைக்கு பின்..

2015 உலகக்கோப்பைக்கு பின்..

இன்னும் சொல்லப் போனால் 2015 உலகக்கோப்பைக்கு பின்னர் வெறும் 15 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நாட்டுக்காக ஆடியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்துடன் சம்பளம் தொடர்பாக இருந்த மோதல் போக்கு தான் என கூறப்படுகிறது.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கிறிஸ் கெயில் பங்கேற்பார் என்ற செய்தி வந்த போது பலரும் ஆச்சரியம் அடைந்தனர். நீண்ட நாட்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடுவது ஏன் என புரியும் வகையில் தற்போது தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் கிறிஸ் கெயில்.

39 வயதாகிறது

39 வயதாகிறது

உலகக்கோப்பை 2019 வரும் மே மாதம் துவங்கி நடைபெற உள்ளது. இதுவே தன் கடைசி ஒருநாள் தொடர் என அறிவித்துள்ளார் அதிரடி மன்னன். கிறிஸ் கெயிலுக்கு தற்போது 39 வயதாகிறது. இவரது இளமைக் காலத்துடன் ஒப்பிட்டால் கெயிலின் முந்தைய துடிப்பு இப்போது இல்லை என்றே கூறலாம். எனினும், அவரது அதிரடி இன்னும் மாறவில்லை.

லாராவுக்கு பின்..

லாராவுக்கு பின்..

பிரையன் லாராவுக்கு அடுத்து அதிக ஒருநாள் போட்டிகள், அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே. 284 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9727 ரன்கள் குவித்துள்ளார் கிறிஸ் கெயில். பகுதி நேர பந்துவீச்சில் 165 விக்கெட்களும் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி ஓய்வா?

தோனி ஓய்வா?

2019 உலகக்கோப்பை பல அனுபவ வீரர்களின் கடைசி உலகக்கோப்பை தொடராக அமைய உள்ளது. சில முக்கிய வீரர்கள் இந்த தொடருடன் ஓய்வு பெறுவார்கள் என கருதப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியாவின் தோனியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு தான் இங்கிலாந்துக்கு தான் "கப்" அடிக்கும் வாய்ப்பு அதிகம்.. கவாஸ்கர் அதிரடி! அப்ப இந்தியா?

Story first published: Monday, February 18, 2019, 18:09 [IST]
Other articles published on Feb 18, 2019
English summary
Chris Gayle announces retirement after World Cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X