For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்.சி.பி-ல் ஒரு பிணைப்பும் இருக்காது.... ஆனால் சி.எஸ்.கே அப்படி இல்லை... ஆதங்கம் தெரிவித்த வாட்சன்

ஆஸ்திரேலியா: ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணியில் இருந்த ஒன்று ஆர்.சி.பி அணியில் துளி கூட இருந்ததில்லை என வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் குறித்த தனியார் தொலைக்காட்சி கேள்விகளுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பாசம், பிணைப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது என வருத்தம் தெரிவித்துள்ளது.

வாட்சன்

வாட்சன்

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான ஷேன் வாட்சன், ஐபிஎல்-ல் பலருக்கும் பிடித்த வீரராவார். கடந்த ஐபிஎல் சீசனுடன் அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர், இதுவரை ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு அணிகளுக்காக ஆடியுள்ளார். மேலும் ராஜஸ்தான், சென்னை அணிகள் கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

கார்ப்பரேட் கம்பெணி

கார்ப்பரேட் கம்பெணி

ஐபிஎல்-ல் ஆர்சிபி அணியுடனான அனுபவம் குறித்து பேசிய அவர், ஆர்சிபி அணியில் அன்பு ரீதியான பிணைப்பு ஏதும் இருக்காது. ஏனென்றால் டியாகோ தலைமையில் செயல்படும் அந்த அணி ஒரு கார்ப்பரேட் கம்பெணி போன்று இருக்கும். அங்கு அணி நிர்வாகம் வீரர்களுக்கு எந்த ஒரு அன்பையும், பிணைப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

சென்னை அணி

சென்னை அணி

சென்னை அணி நான் ஆடியதில் மிகவும் சிறந்த அனுபவம் கொடுத்த ஒன்று. எம்.எஸ்.தோனியுடன் சேர்ந்து விளையாடிய அனுபவங்கள் சிறப்பாக இருந்தது. முக்கியமாக அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் நான் பார்த்ததிலேயே சிறந்த பயிற்சியாளராகும். அணி நிர்வாகம், வீரர்களின் திறமை, கிரிக்கெட் அறிவு என அவர் நன்கு புரிந்து வைத்திருப்பார். மொத்தத்தில் சி.எஸ்.கேவில் ஆடியது ஒரு சிறந்த அனுபவம் என தெரிவித்துள்ளார்.

அனுபவம்

அனுபவம்

ஐபிஎல்-ல் இதுவரை 145 போட்டிகளில் ஆடியுள்ள ஷேன் வாட்சன் 3,874 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதம், 21 அரை சதங்கள் அடங்கும். இதே போல பந்துவீச்சில் 92 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரின் பெஸ்ட் பவுலிங் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்ததே ஆகும்.

Story first published: Thursday, March 4, 2021, 21:46 [IST]
Other articles published on Mar 4, 2021
English summary
Shane Watson Share his experience with RCB and CSK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X