For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019: முத்திரை பதிக்க போகும் 3 முத்தான வீரர்கள் இவங்க தான்.. கை காட்டும் வல்லுநர்கள்

மும்பை:பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் உலக கோப்பை தொடரில் 3 முக்கிய, அறிமுகம் இல்லாத சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களை கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992ம் ஆண்டு எப்படி நடத்தப்பட்டதோ, அதே போன்று நடத்தப்படுகிறது. அதாவது, 10 அணிகளும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதிக வெற்றிகளை குவிக்கும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந் நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய, (அதே நேரத்தில் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்கள்) வீரர்கள் என்று ரேசி வேண்டர் டசன், ஷாய் ஹோப், இமாம் உல் ஹக் ஆகியோரை கிரிக்கெட் வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

விஜய் சங்கரெல்லாம் சரிபட்டு வரமாட்டார்... ராகுல் தான் கரெக்ட்.. மறுபடியும் ஆரம்பித்த வெங்சர்க்கார் விஜய் சங்கரெல்லாம் சரிபட்டு வரமாட்டார்... ராகுல் தான் கரெக்ட்.. மறுபடியும் ஆரம்பித்த வெங்சர்க்கார்

ஒருநாள் தொடரில் அறிமுகம்

ஒருநாள் தொடரில் அறிமுகம்

அவர்களில் ரேசி வேண்டர் டசன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகம் கண்டார். அதன் பின்னர், தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்டியில் சிறப்பாக விளையாடினார்.

திறமையான ஆட்டம்

திறமையான ஆட்டம்

குறுகிய காலத்தில் நடைபெற்ற பல சர்வதேச போட்டியில் டசனின் ஆட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 353 ரன்களை குவித்துள்ளார். இம்முறை உலக கோப்பை தொடருக்கான அணியில் டி வில்லியர்ஸ் இல்லாததும் ஆம்லாவின் மோசமான ஆட்டமும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமது திறமையான ஆட்டத்தினால் ரசிகர்களை மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இளம் வீரர் ஷாய் ஹோப்

இளம் வீரர் ஷாய் ஹோப்

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஷாய் ஹோப். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அவர், இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 6 சதங்கள் உட்பட 2,173 ரன்களை குவித்துள்ளார்.

ஒருநாள் தொடரில் அபாரம்

ஒருநாள் தொடரில் அபாரம்

தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலும் அபாரமாக ஆடினார். இதுவரை இந்த தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடி 396 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் இவரது பேட்டிங் சராசரி 50.53.

சாதனை படைத்தவர்

சாதனை படைத்தவர்

பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர். குறுகிய காலத்தில சர்வதேச கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தவர். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர், 1,381 ரன்களை குவித்துள்ளார். மேலும், அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்தக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் 151 ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.

Story first published: Friday, May 17, 2019, 15:25 [IST]
Other articles published on May 17, 2019
English summary
Cricket experts predicts 3 major and young players in the ICC world cup series 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X