For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொல்லுங்க.. சொல்லுங்க..! ஓஜா சொல்றது உண்மையா..? பொங்கும் ரசிகர்கள் பதுங்கும் பிசிசிஐ

Recommended Video

ICC World Cup: அணி தேர்வில் பிசிசிஐ பாரபட்சம் காட்டுவதாக ஓஜா குற்றச்சாட்டு- வீடியோ

மும்பை: அணி தேர்வில் பிசிசிஐ பாரபட்சம் காட்டுவதாக கூறும் ஓஜாவின் குற்றச் சாட்டில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது

12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். உலக கோப்பை அணியில் 2 தமிழக வீரர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டது.

மொயின் அலி எங்கிட்ட இதைத்தான் சொன்னாரு...! களத்தில் பேசிய ரகசியம்... போட்டுடைத்த கோலி மொயின் அலி எங்கிட்ட இதைத்தான் சொன்னாரு...! களத்தில் பேசிய ரகசியம்... போட்டுடைத்த கோலி

ராயுடுவுக்கு வாய்ப்பில்லை

ராயுடுவுக்கு வாய்ப்பில்லை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவுக்கு அணியில் வாய்ப்பு இல்லை. இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில், அம்பதி ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 பரிமாணங்களில் அசத்துவதால் அவருக்கு வாய்ப்பு அளித்தோம் என்றார்.

3 டி வகை கண்ணாடி

உலககோப்பை அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் அம்பதி ராயுடு தனது ட்விட்டரில், "உலக கோப்பை போட்டிகளை பார்க்க இப்போதுதான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் என்று கிண்டல் செய்து பதிவிட்டார்.

ஓஜா புகார்

இந்த ட்வீட்டுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: சில ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. நானும் இதே சூழ்நிலைக்கு ஆளாகிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாரபட்சம் இல்லை

பாரபட்சம் இல்லை

ஓஜாவின் பதிவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதோ... அதே அளவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ஓஜா பவுலிங் சர்ச்சைக்குள்ளான பிறகுதான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. அதில் எங்கிருந்து பாரபட்சம் வந்தது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளக்கம் வேண்டும்

விளக்கம் வேண்டும்

அணி தேர்வில் பிசிசிஐ பாரபட்சம் காட்டுகிறது என ஓஜா கூறியிருப்பது, இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்கும் வரை இந்த சர்ச்சை ஓயாது. அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாரபட்சம் காட்டுவதாக நீண்ட நாட்களாக எழுந்து வந்த புகாரில் உண்மை இருக்குமோ என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Saturday, April 20, 2019, 10:54 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
Cricket fans asking bcci should expalain about ojha's allegation in team selection.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X