இது சரிப்பட்டு வராது.. தெறித்து ஓடும் ஸ்பான்சர்கள்.. கடும் சிக்கலில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்!

கேப் டவுன் : மிகுந்த நெருக்கடியில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா சிக்கியுள்ள நிலையில், அதன் இரண்டாவது மிகப்பெரிய ஸ்பான்சரும் விலகவுள்ளதாக தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான செயல்பாட்டை அளிக்காத கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் முதல் மற்றும் பெரிய ஸ்பான்சர் நிறுவனமான ஸ்டான்டர்ட் வங்கி, தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க போவதில்லை என்று கடந்த வாரத்தில் தெரிவித்துள்ளது.

 நிர்வாகிகள் பதவி விலக கோரிக்கை

நிர்வாகிகள் பதவி விலக கோரிக்கை

சிறப்பான செயல்பாட்டை அளிக்காத கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைவர் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிற்கு மிகுந்த நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

 ஏற்காத கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா

ஏற்காத கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா

கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைவர் கிறிஸ் நென்சானி மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்கு கிறிஸ் நென்சானி மறுப்பு தெரிவித்து வருகிறார்.

 ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை

ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை

கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இத்தகைய பூசலால் தங்களது வங்கியின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதாக கூறி கடந்த வாரத்தில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் முக்கிய ஸ்பான்சரான ஸ்டாண்டர்ட் வங்கி தன்னுடைய விலகல் முடிவை அறிவித்தது.

 விலகல் முடிவு

விலகல் முடிவு

இந்நிலையில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய ஸ்பான்சரான மொமன்டம் இன்சூரன்ஸ் நிறுவனம், தற்போது தன்னுடைய விலகல் முடிவை அறிவித்துள்ளது.

 மொமன்டம் வலியுறுத்தல்

மொமன்டம் வலியுறுத்தல்

கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் தலைவர் கிறிஸ் நென்சானி மற்றும் துணை தலைவர் பெரஸ்போர்ட் வில்லியம்ஸ் இருவரும் பதவி விலக வேண்டும் என்றும் அதற்கு சுதந்திரமான செயல்பாடு வேண்டும் என்றும் மொமன்டத்தின் துணை தலைமை நிர்வாகி ஜேனட் மாராய்ஸ் தெரிவித்துள்ளார்.

 மாராய்ஸ் அறிவுறுத்தல்

மாராய்ஸ் அறிவுறுத்தல்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துடனான பூசலை நிவர்த்தி செய்யும் வகையில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தன்னுடைய இயக்குநர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மொமன்டம் வலியுறுத்தியுள்ளது.

 இடைக்கால இயக்குநர் கிரீம் ஸ்மித்

இடைக்கால இயக்குநர் கிரீம் ஸ்மித்

இதனிடையே கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இடைக்கால இயக்குநராக அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் அடுத்த மூன்று மாதங்களுக்கு செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். இவர் வரும் 26ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricket South Africa's Major Sponsor seeks resignation of Leading officials
Story first published: Friday, December 13, 2019, 15:12 [IST]
Other articles published on Dec 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X