ஓங்கி அறைந்த அப்ரிடி.. ஸ்பாட் பிக்ஸிங் செய்ததை ஒப்புக் கொண்ட ஆமிர்.. ரசாக் சொன்ன பகீர் ரகசியம்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணி கடந்த 2010ஆம் ஆண்டு பெரும் ஸ்பாட் பிக்ஸிங் புகார்களில் சிக்கித் தவித்தது.

அப்போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து அப்போதைய அணியில் முக்கிய வீரராக இருந்த அப்துல் ரசாக் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

பிக்ஸிங் செய்த ஆமிர்

பிக்ஸிங் செய்த ஆமிர்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் முஹம்மது ஆமிரும் அப்போது, ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி, தடை செய்யப்பட்டார். அப்போது கேப்டன் ஷாஹித் அப்ரிடி அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

2010 இங்கிலாந்து தொடரில்..

2010 இங்கிலாந்து தொடரில்..

2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. சல்மான் பட், முஹம்மது ஆசிப் மற்றும் முஹம்மது ஆமிர் ஆகியோர் பிக்ஸிங்கில் சிக்கி, 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டனர்.

அப்ரிடி விசாரணை

அப்ரிடி விசாரணை

சில வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்வது பற்றி பாகிஸ்தான் அணியினருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்துள்ளது. அப்போதைய கேப்டன் அப்ரிடி முதலில் ஆமிர் தவறு செய்வதை உறுதி செய்ய வேண்டி அவரிடம் விசாரித்துள்ளார்.

ஓங்கி அறைந்த அப்ரிடி

ஓங்கி அறைந்த அப்ரிடி

முதலில் அப்துல் ரசாக், அப்ரிடி இருவரும் அறையில் ஆமிரை விசாரித்துள்ளனர். ஆமிர் தொடர்ந்து மறுக்கவே, அப்துல் ரசாக்கை வெளியே இருக்குமாறு கூறி இருக்கிறார் அப்ரிடி. அப்துல் ரசாக் வெளியே சென்றவுடன், ஆமிரை ஓங்கி அறைந்துள்ளார்.

உண்மையை சொன்ன ஆமிர்

உண்மையை சொன்ன ஆமிர்

அதன் பின் தான் ஆமிர் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த விஷயம் வெளியே தெரிந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட்டையே தடை செய்ய வாய்ப்பு ஏற்படும் என்பதால், இதை மூடி மறைக்கப் பார்த்தது. ஆமிர் விவகாரம் முதலில் வெளியே தெரியும் முன்னே, சல்மான் பட் குறித்து சந்தேகப்பட்டுள்ளார் அப்துல் ரசாக்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சல்மான் பட் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற உலக டி20 தொடரில் அப்துல் ரசாக் உடன் ஆடிய போது அவரது ஆட்டத்தில் நிறைய குழப்பங்கள் இருந்துள்ளது. இதுபற்றி அப்துல் ரசாக் கேட்டபோது, அவர் சரியாக ஆடவில்லை என்று கூறியுள்ளார் அப்ரிடி.

பாகிஸ்தான் கிரிக்கெட் தவறு

பாகிஸ்தான் கிரிக்கெட் தவறு

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டே நடவடிக்கை எடுக்காமல், ஐசிசி-யிடம் அந்த மூன்று வீரர்களும் தங்களை நிரூபிக்கட்டும் என காத்திருந்தது பெரிய தவறு என கூறி உள்ளார் ரசாக்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricket World cup 2019 : Mohammad Amir confessed to Shahid Afridi about Spot Fixing
Story first published: Wednesday, June 12, 2019, 23:38 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X