For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் முதல் அஸ்வின் வரை.. கலாம் மறைவுக்கு கனத்த இதயத்தோடு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

By Veera Kumar

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நேற்று இரவு மரணடைந்தார். இந்த செய்தியை அறிந்ததும், பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கல்ல. டிவிட்டர் மூலம் அவர்கள் தெரிவித்த இரங்கல்களை பார்ப்போம்.

Cricketers pay rich tributes to India's 'greatest President' APJ Abdul Kalam

சச்சின் டெண்டுல்கர்: மிகச்சிறந்த ஒரு மனிதரை இழந்து தேசம் சோகத்திலுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர், புகழ் பெற்ற விஞ்ஞானி, எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஒரு சிறந்த மனிதர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

விராட் கோஹ்லி: பலருக்கும் முன் மாதிரியாக விளங்கிய தொலை நோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவர் அப்துல் கலாம் ஆத்மா சாந்தியடையட்டும்.

இஷாந்த் ஷர்மா: மிகவும் தன்னடக்கமுள்ள ஒரு மனிதர். இந்தியா குறித்து முன்மாதிரியான கனவை வைத்திருந்த அப்துல் கலாம் சாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அனில் கும்ப்ளே: நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு நேர்ந்துள்ளது. நாட்டின் பல லட்சம் மக்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. அப்துல் கலாம் ஆத்மா சாந்தியடையட்டும்.

மந்தீப் சிங்: இந்தியாவுக்கு ஒரு சோகமான நாள். இவ்வாறு குறிப்பிட்டு, படங்களையும் ஷேர் செய்துள்ளார் மந்தீப் சிங்.

பிசன்சிங் பேடி: இந்தியாவின் மிகச்சிறந்த குடியரசு தலைவராக விளங்கியவர் அப்துல்கலாம் என்று சொல்ல முடியும். மிகவும் சாமானியரைப் போன்ற எளிமையோடு கலாம் வாழ்ந்தார். கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் குழந்தையை போன்ற ஆர்வம்மிக்கவர் கலாம். ஒருமுறை என்னிடம் சிறந்த ஸ்பின்னராக எப்படி மாறினீர்கள் என்று கேட்டார். கடின உழைப்பு மேலும் கடின உழைப்பே இதற்கு காரணம் என்று நான் கூறினேன்.

அஸ்வின்: இந்தியாவுக்கு மிக சோகமான நாள். இந்த நாடு உங்களின் ரோகினிக்காக எப்போதும் நினைவில் வைத்திருக்கும். கலாம் ஆத்மா சாந்தியடையட்டும். 2020 கனவை நிறைவேற்றுவதுதான், கலாமின் ஆத்மாவுக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்க முடியும். சுயநலமற்ற ஒரு ஆத்மாவாக விளங்கியதற்கு நன்றிகள் சார்.

விவிஎஸ் லட்சுமணன்: கலாம் எதைமிக அதிகமாக விரும்பினாரோ, அதை செய்துகொண்டிருக்கும்போது உயிர் பிரிந்துள்ளது. இந்த நாட்டின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக இருந்ததோடு மட்டுமின்றி, நாட்டை தனது கனவுகளால் கவர்ந்தவர் கலாம். நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான குணம் கொண்டவர்களில் காலம் ஒருவர். நான் உங்களை மிஸ் செய்கிறேன் சார்.

ஸ்ரீசாந்த்: இந்தியாவுக்கு மிக சோகமான நாள். கலாம் திடீரென மறைந்த செய்தி கேட்டு, மிகவும் கவலைப்பட்டேன். உண்மையாக இவர் ஒரு ரியல் ரத்தினம்.

சஞ்சய் மஞ்சரேக்கர்: கனவு என்பது தூக்கத்தில் வருவதில்லை. உன்னை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுவே கனவு-அப்துல்கலாம்.

சுரேஷ் ரெய்னா: ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு டிவிட் செய்து, "வருங்கால சந்ததிகளையும் ஈர்த்தமைக்காக நன்றி. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் அப்துல் கலாம். என்ற வாசகம் அடங்கிய போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

வினய்குமார்: இந்த நாட்டுக்கு நீங்கள் மிகப்பெரிய உந்துசக்தி. இது மிகப்பெரிய இழப்பு. நீங்கள் மிஸ் செய்யப்படுவீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Story first published: Tuesday, July 28, 2015, 10:23 [IST]
Other articles published on Jul 28, 2015
English summary
Present and former cricketers today paid rich tributes to former Indian President Dr. APJ Abdul Kalam, who passed away at a private hospital in Shillong.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X