‘பாகிஸ்தான் முர்தாபாத்’ முதல் டெஸ்டில் நடந்த சர்ச்சை சம்பவம்..குழம்பிய இந்திய வீரர்கள்- வைரல் வீடியோ

கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகிறது.

வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. அடி வாங்கும் இந்தியா ஏ அணிவென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி.. அடி வாங்கும் இந்தியா ஏ அணி

 திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதால் கிரிக்கெட் போட்டிகளை காண மீண்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் முழு அளவில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதே போல இன்று டெஸ்ட் போட்டிக்கும் பார்வையாளர்கள் முழு அளவில் திரண்டனர். இதில் தங்களது அணிக்காக ரசிகர்கள் கோஷம் எழுப்புவது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று திடீரென சம்மந்தம் இன்றி பாகிஸ்தானை வம்புக்கிழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சையை கிளப்பிய கோஷம்

ஆட்டத்தின் முதல் செஷனின் போது, 6வது ஓவரில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ‘நாம் வென்றுவிடுவோம், இந்தியா வெல்லும்' என ஹிந்தியில் கோஷம் எழுப்பினர். ஆனால் திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் மட்டும் ‘பாகிஸ்தான் ஒழிக' என கோஷம் எழுப்பியதால் கூடியிருந்த மொத்த ரசிகர் கூட்டமும் அதே கோஷத்தை எழுப்பினர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சைக்கு காரணம்

சர்ச்சைக்கு காரணம்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதில் இருந்து தான் இதுபோன்ற சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அந்த போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் சாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களை கிண்டல் செய்ய, அதன்பின்னர் பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்தது என அடுக்கடுக்காக பிரச்னைகள் நீண்டு வருகிறது.

ஐசிசி-ன் திட்டம்

ஐசிசி-ன் திட்டம்

இந்த பிரச்னைகளுக்கு முடிவுகட்டும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட டி20 அல்லது ஒருநாள் போட்டி தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இதற்காக துபாய் கிரிக்கெட் வாரியம் கூட மைதானத்தை கொடுப்பதற்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Crowd chants ‘Pakistan Murdabad’ during 1st test match between india vs newzealand, creates controversy
Story first published: Thursday, November 25, 2021, 14:45 [IST]
Other articles published on Nov 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X