For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஹசாரோ கிரிக்கெட் - பட்டையை கிளப்பிய மற்றொரு சிஎஸ்கே வீரர்.. குட்டி பாண்டியா கலக்கல்

மும்பை : அண்டர் 19 கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்து ஆக்ரோஷமாக பந்து வீசி அசத்தியவர் இந்திய வீரர் ராஜவர்தன் ஹங்கர்கேக்கர்.

இவருடைய திறமையை பார்த்து சக அணி வீரர்கள் ஹங்கர்கேக்கரை குட்டி ஹர்திக் பாண்டியா என்று அழைக்க தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்கரை சிஎஸ்கே அணி கடும் போட்டிக்கு பிறகு ஏலத்தில் எடுத்தது.

எதிர்கால கேப்டன்.. 4 போட்டிகளில் 3 சதங்கள்.. கழற்றிவிட்ட இந்தியா அணிக்கு ருதுராஜ் கெயிக்வாட் பதிலடி!எதிர்கால கேப்டன்.. 4 போட்டிகளில் 3 சதங்கள்.. கழற்றிவிட்ட இந்தியா அணிக்கு ருதுராஜ் கெயிக்வாட் பதிலடி!

சிஎஸ்கே முடிவு

சிஎஸ்கே முடிவு

எனினும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட சி எஸ் கே வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு காரணம் சொன்ன சிஎஸ்கே, ஹங்கர்கேக்கர் இளம் வீரர் என்பதால் அவரை எடுத்த உடனே கடினமான போட்டிகளில் களம் இறக்கி அவருடைய உத்வேகத்தை குலைக்க விரும்பவில்லை என்று கூறியது. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தாலும், சிஎஸ்கே வின் பதில் ஓரளவு நியாயமாக இருந்தது.

15 விக்கெட்டுகள்

15 விக்கெட்டுகள்

இந்த நிலையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ராஜவர்த்தன ஹங்கர்கேக்கர் சிறப்பாக பந்து வீசி அசத்தியிருக்கிறார். தமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் பேட்டிங்கில் ஜொலித்திருக்கும் ஹங்கர்கேக்கர், பந்துவீச்சை பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். குறிப்பாக உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்கர் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இதில் ராஜவர்த்தனே வீசிய பந்துகளை எதிர் கொள்ள முடியாமல் உத்தரப்பிரதேச வீரர்கள் தினறினர். ஸ்டெம்ப்களைப் பதம் பார்க்கும் யாக்கர்களை ஹங்கர்கேக்கர் வீசி அசத்தினார்.இதேபோன்று அசாம்க்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஹங்கர்கேக்கரின் அபார பந்துவீச்சால் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா அணி 350 ரன்கள் குவித்தாலும், அசாம் அணியும் அதிரடியாக விளையாடி மகாராஷ்டிராவின் இலக்கு அருகே வந்தது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

எனினும் 50 ஓவர் முடிவில் அசாம் அணி 338 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட், மகாராஷ்டிரா அணிக்காக கலக்கினாலும் பந்துவீச்சில் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்கர் தான் வெற்றியை உறுதி செய்தார். பத்து ஓவர் வீசிய அவர் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 65 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.இதனால் தான் அசாம் அணி தோல்வியை தழுவியது.

வாய்ப்பு தருவாரா தோனி

வாய்ப்பு தருவாரா தோனி

சிஎஸ்கே அணி வரும் ஐபிஎல் தொடரில் ஹங்கர்கேக்கரை பயன்படுத்தினால் அது நிச்சயம் அந்த அணிக்கு பெரிய நலனை கொடுக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படி ஹர்திக் பாண்டியா விளங்கினாரோ அதேபோல் சிஎஸ்கேவிற்கு ராஜவர்த்தன் ஹங்கர்கேக்கர் இருப்பார். ஏற்கனவே ருத்ராஜ் நல்ல பார்மில் உள்ள நிலையில் ராஜவர்த்தன் ஹங்கர்கேக்கர் அதிரடியாக செயல்படுவது சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எனினும் முக்கிய கேள்வியே தோனி இதுபோன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா? இல்லை ஸ்பார்க் இல்லை என்று பெஞ்சில் உட்கார வைத்து விடுவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, November 30, 2022, 20:28 [IST]
Other articles published on Nov 30, 2022
English summary
CSK all rounder Rajvardhan Hangargekar shines in vijay hazare trophy 2022 விஜய் ஹசாரோ கிரிக்கெட் - பட்டையை கிளப்பிய மற்றொரு சிஎஸ்கே வீரர்.. குட்டி பாண்டியா கலக்கல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X