அஜித் பாணியில் தல தோனி.. ட்ரோன்களின் மீது வந்த திடீர் ஆர்வம்.. சென்னையில் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்தின் பாணியில் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்துள்ள ஒரு விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தாண்டு ஐபிஎல்-ல் சரிவில் இருந்த சிஎஸ்கே அணிக்கு, தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்பது போன்று உறுதி கொடுத்து சென்றார்.

மகளை கொஞ்சும் தோனி.. தமிழக நெசவாளர் கொடுத்த அன்பு பரிசு.. நெகிழ்ச்சியில் தல போட்ட போட்டோமகளை கொஞ்சும் தோனி.. தமிழக நெசவாளர் கொடுத்த அன்பு பரிசு.. நெகிழ்ச்சியில் தல போட்ட போட்டோ

தோனியின் முதலீடு

தோனியின் முதலீடு

இந்நிலையில் கிரிக்கெட்டை ஒதுக்கிவிட்டு, தோனி தனது அடுத்த பணிகளில் களமிறங்கியுள்ளார். ஓய்வுக்கு பிறகு தோனி, ஆடை நிறுவனம், மதுபானம், விவசாயம் என பல தொழில்களில் கலக்கி வருகிறார். தற்போது ட்ரோன்களிலும் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளார். அதுவும் விவசாயத்திற்காகவாம்.

சென்னையை சேர்ந்த நிறுவனம்

சென்னையை சேர்ந்த நிறுவனம்

சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது. தோனி ஏற்கனவே விவாசயம் செய்துவரும் சூழலில், இனி நாடு முழுக்க விவசாயத்திற்கு ட்ரோன்கள் தான் உதவும் என்ற கணிப்பில் பணத்தை போட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் ஏன் முதலீடு

இந்த நிறுவனத்தில் ஏன் முதலீடு

இந்தியாவில் குறைந்த விலையில் ட்ரோன்களை தயார் செய்யும் நிறுவனங்களில் கருடாவும் முக்கியமான ஒன்று. இதே போன்று இந்த நிறுவனத்தின் "பிராண்ட் அம்பாசிடர்", அதாவது விளம்பர தூதராக எம்.எஸ்.தோனி செயல்பட போவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் கவுரவம்

எலான் மஸ்க் கவுரவம்

இந்த நிறுவனம் குறித்து எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரில் குறிப்பிட்டு கவுரப்படுத்தியிருந்தார். இதே போல சமீபத்தில் நடைபெற்ற பாரத் ட்ரோன் மகா உத்சவ் நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni invests in Drones ( ட்ரோன்களில் முதலீடு செய்த எம்.எஸ்.தோனி ) சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, திடீரென ட்ரோன்களை தயார் செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
Story first published: Monday, June 6, 2022, 10:08 [IST]
Other articles published on Jun 6, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X