For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த அர்ஜூனா இது... சச்சின் மகனைப் பார்த்து வியந்து நிற்கும் பெண் வீராங்கனை

லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகனாகவே இன்றளவும் அறியப்படும் அர்ஜூன் டெண்டுல்கர் அப்பாவைப் போலவே நல்ல வீரரும் கூட. அதை நிறையப் பேருக்கு உணர்த்தும் வகையிலான வாய்ப்புகள் இன்னும் அவருக்கு அமையாதது துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் அர்ஜூன் குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் இங்கிலாந்து மகளிர் வீராங்கனை டேனியல் வியாட்.

டேனியல் வியாட்டுக்கு ஏகப்பட்ட விசிறிகள் உள்ளனர். ஆனால் அவரோ இந்தியா என்றால் ரொம்பவே ஆர்வமாகி விடுவார். குறிப்பாக விராட் கோலி மீது கொள்ளைப் பிரியம் அவருக்கு. அப்படிப்பட்ட டேனியல் வியாட் அர்ஜூன் டெண்டுல்கரின் நெருங்கிய தோஸ்த் என்பது உங்களில் "கித்னா" பேருக்குத் தெரியும்!

டேனியலை விட அர்ஜூன் 9 வயசு சின்னவர். நல்ல பாசமாக பழகுவாராம் அவரிடம் டேனியல். 2009 முதலே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. லண்டனுக்கு சச்சினும், அர்ஜூனும் வரும்போதெல்லாம் அவர்களைப் பார்க்க ஓடிப் போய் விடுவாராம் டேனியல்.

நாம போக வேண்டாம்.. கங்குலி, சச்சினிடம் அப்படியா சொன்னாரு டிராவிட்!நாம போக வேண்டாம்.. கங்குலி, சச்சினிடம் அப்படியா சொன்னாரு டிராவிட்!

அர்ஜூனுடன் முதல் சந்திப்பு

அர்ஜூனுடன் முதல் சந்திப்பு

அர்ஜூனுடன் தனது முதல் சந்திப்பு குறித்து ஒரு இணையதளத்துக்கு விளக்கியுள்ளார் டேனியல் வியாட். அதில், அர்ஜூன் நல்லா வளர்ந்து விட்டார். நல்ல முன்னேற்றம். முன்பை விட வேகமாக பந்து வீசுகிறார். பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. அவரது பந்தை சந்திப்பது சற்று சவாலானதுதான். எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. எங்களுக்கெல்லாம் நிறையவே பந்து வீசியுள்ளார் அர்ஜூன்.

சச்சின் வந்தால் ஓடிருவேன்

சச்சின் வந்தால் ஓடிருவேன்

லார்ட்ஸ் மைதானத்திற்கு அவர்கள் வரும்போதெல்லாம் நான் ஓடிப் போய்ருவேன். நெட்டில் பயிற்சி எடுக்கும்போது அர்ஜூனை கூப்பிட்டு எனக்கு பந்து வீசு என்பேன். அவரும் இரு இரு வேகமாக பவுன்சர் போட்டு மண்டையைப் பொளந்துர்றேன்.. அப்பத்தான் மறுபடியும் கூப்பிட மாட்டீங்க என்று கிண்டலாக கூறுவார். ஆனால் சிறப்பாக பந்து வீசுவார் என்று தெரிவித்துள்ளார்.

பந்து வீசினேன்

பந்து வீசினேன்

அது 2009 அல்லது 2010 ஆக இருக்கும். நான் எம்சிசி இளம் வீராங்கனைகள் குழுவில் ஒரு ஆளாக இடம் பெற்றிருந்தேன். அப்போதுதான் சச்சினையும், அர்ஜூனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவருடனும் நெட்டில் நிறைய பேசினேன். அப்போது அர்ஜூனுக்கு 10 வயது இருக்கலாம். அப்போது நான் அர்ஜூனுக்குப் பந்து வீசினேன். நல்லா ஞாபகம் இருக்கு.

Recommended Video

Indian Cricketers and their lookalikes
அர்ஜூன் அம்மா லவ்லி

அர்ஜூன் அம்மா லவ்லி

அதேபோல ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது சச்சினை சந்திக்க நேர்ந்தது. சச்சின் குடும்பம் ரொம்ப அழகானது. அர்ஜூனின் அம்மா ரொம்ப லவ்லி என்று முகம் பூரிக்க சொல்லி முடித்தார் டேனியல் வியாட். சீக்கிரம் இந்தியாவுக்கு வந்து அர்ஜூனுடன் இணைந்து ஒரு காட்சிப் போட்டியில் விளையாடுங்க.. இந்திய ரசிகர்களும் சந்தோஷப்படுவாங்க.

Story first published: Tuesday, June 30, 2020, 19:24 [IST]
Other articles published on Jun 30, 2020
English summary
Danielle Wyatt is happy with Arjun Tendulkar's growth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X