கோலியின் வொர்க்-அவுட் வீடியோ.. பார்த்து மெர்சலான டேவிட் வார்னர்!

Kohli workout for upcoming test against Bangladesh

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல இளைஞர்களுக்கு இந்த விஷயத்தில் அவர் கனவு நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

நாளை மறுநாள் வங்கதேசத்திற்கு எதிராக கோலி தலைமையிலான இந்திய அணி அதிரடியாக பகலிரவு ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், தன்னுடைய வயிற்று தசைகளை தான் பிட்டாக வைத்துக் கொள்வது குறித்த வீடியோ ஒன்றை இருதினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து ஈர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நான் இந்த மனிதனை (கோலியை) மிகவும் விரும்புகிறேன். ஆப்ஸ்... ஆப்ஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

 இளைஞர்களுக்கு வழிகாட்டி

இளைஞர்களுக்கு வழிகாட்டி

இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் கேப்டன் விராத் கோலி, உலக அளவில் பல வீரர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார். பல தளங்களில் அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்தாலும், தன்னுடைய பிட்னசை காப்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர் உள்ளார்.

 வயிற்று தசைகளின் பிட்னஸ்

வயிற்று தசைகளின் பிட்னஸ்

இந்நிலையில் கடந்த திங்களன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலி தன்னுடைய வயிற்று தசைகளின் பிட்னஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 வயிற்றுப்பகுதியை தனியாக காண்பித்த கோலி

வயிற்றுப்பகுதியை தனியாக காண்பித்த கோலி

அந்த வீடியோவில் தன்னுடைய வயிற்றுப்பகுதியின் பிட்னசை தனியாக காண்பிக்கும்படி தன்னுடைய டி-ஷர்ட்டை தூக்கிக் காண்பித்த கோலி, வொர்க்-அவுட் செய்துக் கொண்டே, தன்னுடைய வயிற்று தசைகளை எடுத்து காண்பித்தார்.

 11 ஆயிரம் பார்வைகள்

11 ஆயிரம் பார்வைகள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியை லட்சக்கணக்கானோர் தொடர்ந்துவரும் நிலையில், இந்த வீடியோவை அவர் வெளியிட்ட சில மணிநேரங்களில் 20 லட்சம் லைக்குகளை வீடியோ பெற்றுள்ளது. மேலும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்த்துள்ளனர்.

"இந்த மனிதனை நான் நேசிக்கிறேன்"

இந்த வீடியோவை கோலியின் ரசிகர்கள் பார்த்து, வியந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும், வீடியோவை பார்த்துள்ளார். மேலும் நான் இந்த மனிதனை மிகவும் நேசிக்கிறேன் என்றும் ஆப்ஸ்... ஆப்ஸ்... என்றும் அவர் பாராட்டியதோடு தன்னுடைய கட்டைவிரலை உயர்த்திக்காட்டியும் மகிழ்ந்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
David Warner praises Kohli for his fitness video
Story first published: Wednesday, November 20, 2019, 20:27 [IST]
Other articles published on Nov 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X