For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை மட்டும் செய்துவிட்டால் கிரிக்கெட்டுக்கு குட்பை.. ஆஸி. வீரர் டேவிட் வார்னரின் இந்தியா கனவு..!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர், தனது ஓய்வு முடிவு குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வார்னருக்கு உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்

மேத்தீவ் ஹைடன் போல் அதிரடியாக ஆடக்கூடிய வார்னர், 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் வென்றுள்ளார்.

இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..இந்திய அணி சறுக்கல்..!! கேம்க்குள் வந்தது தென்னாப்பிரிக்கா..?? வீணாகுமா ராகுல் சதம்..

சாம்பியன் வார்னர்

சாம்பியன் வார்னர்

35 வயதான வார்னர் இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 7551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 24 சதங்கள் அடங்கும், 128 ஒருநாள் போட்டியில் விளையாடி 5455 ரன்களை குவித்துள்ள வார்னர், 18 சதங்களை விளாசியுள்ளார். இதை தவிர ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, சாம்பியன் பட்டத்தையும் பெற்று தந்துள்ளார்.

வார்னரின் கனவு

வார்னரின் கனவு

டி20 உலகக் கோப்பை, ஐ.சி.சி. உலகக் கோப்பை , ஆஷஸ் டெஸ்ட் தொடர் என அனைத்தையும் வென்றுள்ள வார்னரிடம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு வார்னர், இந்தியாவில் இதுவரை தாம் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அதனை செய்து முடிக்க கடைசியாக ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

வார்னரின் கனவு

வார்னரின் கனவு

டி20 உலகக் கோப்பை, ஐ.சி.சி. உலகக் கோப்பை , ஆஷஸ் டெஸ்ட் தொடர் என அனைத்தையும் வென்றுள்ள வார்னரிடம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு வார்னர், இந்தியாவில் இதுவரை தாம் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அதனை செய்து முடிக்க கடைசியாக ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

இதே போன்று இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை சமன் தான் செய்துள்ளோம் இதுவரை வென்றது இல்லை. அதற்கும் ஒர வாய்ப்பு கிடைத்தால் அதன் பிறகு ஒய்வு குறித்து முடிவு எடுப்பேன் என்று வார்னர் கூறியுள்ளார். வார்னரின் கருத்து கிரிக்கெட் உலகில் இந்தியா எந்த அளவுக்கு அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது என்பதை பறைசாற்றுகிறது

Recommended Video

Adelaide Ashes Test abandoned after lightning strike on Day 2 | ENG vs AUS | OneIndia Tamil
இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்வதே லட்சியம், இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்வதே லட்சியம் என்று கிரிக்கெட் வீரர்கள் பேட்டி கொடுத்து கேட்டுள்ளோம். ஆனால் முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று வெளிநாட்டு வீரர் கூறியதை நாம் கேட்டுள்ளோம். கடைசியாக 12 ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 29, 2021, 17:04 [IST]
Other articles published on Dec 29, 2021
English summary
David Warner on his Retirement and dream to Win a series in india. ஓய்வு குறித்து டேவிட் வார்னர் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X