For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி அதிரடி காட்டியது... நிறுத்தி நிதானமாக வென்றது ஹைதராபாத்... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது!

ஐபிஎல் போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி, மிகவும் வலுவான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மீண்டும் மோதுகிறது.

Recommended Video

நிறுத்தி நிதானமாக டெல்லியை வென்றது ஹைதராபாத்

டெல்லி: டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் அபாரமாக சதமடிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி 10 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஒவ்வொரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளன. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாக உள்ளது. அதனால், எந்தெந்த அணிகள் முன்னேறப் போகின்றன என்பது தொடர்ந்து சர்பரைசாகவே உள்ளது.

அசத்தும் பவுலிங்

அசத்தும் பவுலிங்

இந்த சீசனில் ஹைதராபாத் மிகவும் வலிமையான அணியாக உள்ளது. பேட்டிங்கில் ஹைதராபாத் அணி கில்லியாக உள்ளது. அதே நேரத்தில் குறைந்த ஸ்கோரை அடித்தாலும், அதை சமாளிக்கக் கூடியதாக அதன் பவுலிங் உள்ளது.

வெற்றி நம்பிக்கை

வெற்றி நம்பிக்கை

டெல்லி, ஹைதராபாத் அணிகள் இம்மாதம் 5ம் தேதி மோதின. அதில் ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அபாரமாக ஆடியபோதும், ஹைதராபாத் அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெல்வோம் என்று டெல்லி நம்பிக்கையுடன் இருந்தது.

ரிஷப் பந்த் அதிரடி

ரிஷப் பந்த் அதிரடி

டெல்லியில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தது. ஆனால் மறு பக்கம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன், 128 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத்

பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத்

188 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய ஹைதராபாத், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வென்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பிறகு, ஷிகார் தவான் 50 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 92 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 53 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இருவரும் நிதானமாக விளையாடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தனர். இந்த வெற்றியை அடுத்து, 18 புள்ளிகளுடன், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது ஹைதராபாத்.

Story first published: Thursday, May 10, 2018, 23:39 [IST]
Other articles published on May 10, 2018
English summary
Delhi daredevils meets formidable sun risers hyderabad in the must win match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X