For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம அட்வைஸ்.. தஞ்சை கல்வெட்டிலேயே செதுக்கலாம்.. தீபக் சாஹர் சொன்ன தங்க வார்த்தைகள்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் தீபக் சாகர் சிறுவர்களை சந்தித்து இன்று சூப்பரான அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

சென்னை துரைப்பாக்கத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி உள்ளது. இதில் பயிற்சி எடுத்து வரும் சிறுவர்களை தீபக் சாகர் சந்தித்து தம் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றேன் என்பதை குறித்து விளக்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் குறித்தும் தீபக்சாகர் பேசினார்.

3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா? 3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

குறுக்கு வழி இல்லை

குறுக்கு வழி இல்லை

அவர் பேசியது பின்வருமாறு, நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே, சர்வதேச கிரிக்கெட் வீரராக உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அறையில் உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் போஸ்டரை ஒட்டிக் கொள்ளுங்கள். அதில் உங்களது முகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கடுமையான உழைப்பை நீங்கள் செலுத்த வேண்டும். உழைப்பு மட்டும்தான் மூலதனம். வேறு குறுக்கு வழியே கிடையாது.

உதவ மாட்டார்கள்

உதவ மாட்டார்கள்

வெற்றிக்கு கடின உழைப்பு மட்டும் தான் சாவி. ஒரு கிரிக்கெட் வீரராக சில நேரம் நீங்கள் தேர்வு செய்யப்படலாம், சில நேரம் உங்களை விட சிறந்த வீரர்கள் இருப்பதால் நீங்கள் அணியில் இருந்து விலக்கப்படலாம். ஆனால் உங்களை விட சிறந்த வீரர்களை நீங்கள் தோற்கடிக்க வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பு மட்டும்தான் தேவை. உங்களுக்கு வேறு யாரும் உதவி செய்ய மாட்டார்கள். உங்கள் பயிற்சியாளரோ இல்லை, பெற்றோரோ உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள்.

கிரிக்கெட்டை விட்டு விடுங்கள்

கிரிக்கெட்டை விட்டு விடுங்கள்

நீங்கள் தான் மைதானத்திற்கு வந்து, நீங்கள் தான் உங்களுக்காக உதவி செய்ய வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவு உங்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.இந்திய அணியில் இடம் பெற பல ஆண்டுகள் ஆகலாம். உடனே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வெறும் மாநிலத்திற்காக விளையாடினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் தயவு செய்து கிரிக்கெட்டை விட்டு விடுங்கள்.

தோனியின் நம்பிக்கை

தோனியின் நம்பிக்கை

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பார்த்தால் உங்களுக்கு தெரியும். ஆரம்ப காலகட்டத்தில் மோசமாகத்தான் இருந்தது. ஆனால் நான் இரவு பகலாக கடின உழைப்பை மேற்கொண்டேன். கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் உங்களைத் தேடி வாய்ப்பு வரும். உங்களுக்கு தேவையானது உங்களுக்கு கிடைக்கும். தோனியுடன் விளையாடும் போது அவர் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்.

முக்கிய தருணம்

முக்கிய தருணம்

அவர்தான் நம்பர் ஒன் கேப்டன் தோனி. ஒருவரை நம்பி விட்டால் அந்த நபர் தன்னைத்தானே கண்டிப்பாக நம்ப வேண்டும்.சிஎஸ்கே அணிக்காக விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது சிஎஸ்கே தான். தோனி கொடுத்த நம்பிக்கையால் தான் நான் சிறந்து விளையாடினேன். சிஎஸ்கே அணிக்காக கோப்பை வென்றதை என் வாழ்நாளில் முக்கிய தருணம் ஆகும்.

மீண்டும் கிரிக்கெட்

மீண்டும் கிரிக்கெட்

நான் கிரிக்கெட் விளையாட தொடங்கும் போது ஒரு ஆல் ரவுண்டராக தான் வரவேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் பேட்டிங் செய்யும்போதெல்லாம் என் அணி வெல்ல வேண்டும் என்று நினைத்தேன் என இவ்வாறு அவர் கூறினார். தீபக்சாகர் கடந்த ஆறு மாதமாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்.தற்போது அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய அணி இடம் பெற்றுள்ளார்.

Story first published: Friday, August 5, 2022, 23:21 [IST]
Other articles published on Aug 5, 2022
English summary
Deepak chahar advice to youngsters in csk academy செம அட்வைஸ்.. தஞ்சை கல்வெட்டிலேயே செதுக்கலாம்.. தீபக் சாஹர் சொன்ன தங்க வார்த்தைகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X