For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'வேற தொழில் பாரு'.. சாஹர் கிரிக்கெட் வாழ்க்கையை.. காலி செய்ய பார்த்த "வாய்க்கொழுப்பு" கோச்

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திடீர் ஹீரோவாக உருவெடுத்துள்ள தீபக் சாஹரின் வாழ்க்கையையே ஒருவர் திசைத்திருப்ப பார்த்திருக்கிறார்.

Recommended Video

Deepak Chahar நீ வேற தொழில் பாரு -Greg Chappell | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் விழுந்த பிறகும், நங்கூரம் பாய்ச்சி கடைசி வரை நின்று அணியை கரைசேர்த்தவர் தீபக் சாஹர்.

இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களுக்காக அல்லாடிக் கொண்டிருக்க, புது நம்பிக்கையை விதைத்திருக்கிறார் தீபக்.

'திரும்ப வந்துட்டேனு சொல்லு’ இந்திய அணியுடன் இணைந்தார் ரிஷப் பண்ட்.. ஆனால் ஒரு பெரும் சிக்கல்! 'திரும்ப வந்துட்டேனு சொல்லு’ இந்திய அணியுடன் இணைந்தார் ரிஷப் பண்ட்.. ஆனால் ஒரு பெரும் சிக்கல்!

 அபார அணுகுமுறை

அபார அணுகுமுறை

அவர் கன்னாபின்னாவென சுற்றி பந்து சிக்ஸர்களுக்கு பறந்து ஜெயித்திருந்தால் கூட அதிர்ஷ்டத்தில் ஜெயித்துவிட்டது எனலாம். முழுதாக 82 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். ஒரு நீட் + பெர்ஃபெக்ட் பேட்டிங் எனலாம். ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரரைப் போல தீபக்கின் அணுகுமுறை இருந்தது.

 போட்டுடைத்த பிரசாத்

போட்டுடைத்த பிரசாத்

சில ஷாட்கள் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தது உண்மை தான் என்றாலும், இத்தனை பந்துகள் அவர் நின்று காட்டியது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. இந்நிலையில், தீபக் சாஹரை 'கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் செய்தால் உன் வாழ்க்கைக்கு நல்லது' என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சில வருடங்களுக்கு முன்பு கூறியதாக முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

 ஏன் வெளிநாட்டு கோச்?

ஏன் வெளிநாட்டு கோச்?

இதுகுறித்து ட்வீட் செய்த பிரசாத், "தீபக் சாஹரின் குறைவான உயரத்தை குறிப்பிட்டு, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியில் சேர்க்க மறுத்த முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல், சாஹரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது சாப்பல் ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பதவி வகித்தார். இப்போது அதே சாஹர் தனது திறன்களைக் கொண்டு தனி ஆளாக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் கொடுத்துள்ளார். இந்த கதையின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், உங்களை நம்புங்கள், வெளிநாட்டு பயிற்சியாளர்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று நெத்தியில் அடித்தாற் போல் குறிப்பிட்டுள்ளார்.

 யாருக்கு முக்கியத்துவம்?

யாருக்கு முக்கியத்துவம்?

அவர் தனது மற்றொரு டீவீட்டில், "சில வெளிநாட்டு பயிற்சியாளர்கள் திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் திறமையான நபர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இந்த நேரத்தில் இந்திய அணியும், ஐபிஎல் அணிகளும் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தவிர்த்து, முடிந்த வரை இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

 வரலாறு அறியும்

வரலாறு அறியும்

கிரேக் சாப்பல், சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது, பயிற்சியாளராக இருந்தவர். அப்போதே கறாரான பேர் வழி என்று பெயரெடுத்தவர். இதனால், கங்குலிக்கும் சாப்பலுக்கும் முட்டிக் கொண்டதை வரலாறு அறியும். சீனியர் வீரர்களாக சச்சின், டிராவிட், கும்ப்ளே, லக்ஷ்மன் என்று எவருடனும் அனுசரணையாக செல்லாமல் முரண்டுபிடித்தவர் சாப்பல். கங்குலியை கேட்டுப் பார்த்தா, கதை கதையாய் சொல்லுவார்!.

Story first published: Thursday, July 22, 2021, 14:30 [IST]
Other articles published on Jul 22, 2021
English summary
deepak Chahar rejected by Chappell for height - தீபக் சாஹர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X