For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி சிக்சர் மழை.. மரத்தின் உச்சியில் விழுந்த பந்து.. தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் மிரட்டல்

டுபுளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

முதல் போட்டியை ஏற்கனவே வென்ற நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றம் செய்யப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதலில் பொறுப்பாக விளையாடினார். அதிரடியாக ஆட முற்பட்ட இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் மோசமான பந்துகளை மட்டும் அடித்த இந்த ஜோடி, பிறகு நீ எப்படி போட்டாலும் அடிப்பேன் என்று லெவலுக்கு சென்றுவிட்டனர்.

Deepak hooda and sanju Samson brilliant innings put india in pole position

தீபக் ஹூடா ஒரு பக்கம் சிக்சர் சிக்சாக அடிக்க தொடங்கினார். குறிப்பாக ஆண்டி மிக்பிரின், வீசிய பந்தில், தீபக் ஹூடா அடித்த பந்து மைதானத்துக்கு வெளியே இருந்த மரத்தின் எச்சியின் மீது பட்டது. இதே போன்று இன்னொரு பந்தம் மைதானத்துக்கு வெளியே சென்று விழுந்தது. இதன் மூலம் 27 பந்துகளில் தீபக் ஹூடா அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்சரும், 3 பவுண்டரிகள் அடங்கும்.

Deepak hooda and sanju Samson brilliant innings put india in pole position

மறுபுறம் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சஞ்சு சாம்சன் அரைசதத்தை 31 பந்துகளில் பூர்த்தி செய்தார். இதே போன்று EA sports cricket கணினி கேம்களில் வருவது போல் தீபக் ஹூடா சிக்சர்களை விரட்டினார்.

இதன் மூலம் இந்த ஜோடி 2வது விக்கெட்டில் 55 பந்துக்கு 100 ரன்களை சேர்த்தது. தீபக் ஹூடா 14 ரன்கள் அடித்திருந்த போது நடுவர் எல்பிடபிள்யூக்கு அவுட் வழங்கினார். ஆனால் தீபக் ஹூடா அதனை மறு ஆய்வு செய்ய, அது அவுட் இல்லை என தெரியவந்தது. தற்போது டிஆர்எஸ் மூலம் லைஃப் கிடைக்க, அதனை தீபக் ஹூடா சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்.

அயர்லாந்துக்கு செல்லாத ஹர்திக் பாண்ட்யா... கொடுத்த நேரத்தை விட தாமதம் ஏன்.. குழப்பத்தில் இந்திய அணி!அயர்லாந்துக்கு செல்லாத ஹர்திக் பாண்ட்யா... கொடுத்த நேரத்தை விட தாமதம் ஏன்.. குழப்பத்தில் இந்திய அணி!

Story first published: Tuesday, June 28, 2022, 22:23 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
Deepak hooda and sanju Samson brilliant innings put india in pole position இந்திய அணி சிக்சர் மழை.. மரத்தின் உச்சியில் விழுந்த பந்து.. தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் மிரட்டல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X