For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலயின் தலையை பதம் பார்க்க வந்த பந்து… ஐ யம் சாரி தோனி… ஜென்டில்மேனாக மாறிய கிறிஸ் மோரிஸ்

சென்னை:ஆபத்தான முறையில் பந்துவீசியதற்காக, தல தோனியிடம் சாரி கேட்டார் டெல்லி பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ்.

ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீசியது. இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களான டு பிளிசிஸ், வாட்சன் களமிறங்கினர்.

அதில் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளிசிஸ் கூட்டணி நிதானமாக விளையாடியது. ரெய்னா 59 ரன்களும், டு பிளிஸிஸ் 39 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

விழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா... இது வேற லெவல் ஷாட்.. வைரலான வீடியோ விழுந்து..வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல ரெய்னா... இது வேற லெவல் ஷாட்.. வைரலான வீடியோ

179 ரன்கள் குவிப்பு

179 ரன்கள் குவிப்பு

அடுத்து களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜா அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை சென்னை அணி எடுத்தது.

20வது ஓவர் சுவாரசியம்

20வது ஓவர் சுவாரசியம்

அந்த போட்டியில் சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது டெல்லி பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிசின் 20வது ஓவர் தான்.

மோரிஸ் பவுலிங்

அதாவது, போட்டியின் முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் வீசினார். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்து தோனியின் தலைக்கு நேராக சென்றது.

சாரி கேட்ட மோரிஸ்

சாரி கேட்ட மோரிஸ்

உடனே தோனியிடம் நேராக சென்ற மோரிஸ் மன்னிப்பு கோரினார். கைகளில் அதிக வியர்வை இருந்ததாகவும், அதனால் பந்து கைகளைவிட்டு நழுவி சென்றாகவும் கூறினார்.

நோபாலில் சிக்சர்

நோபாலில் சிக்சர்

பின்னர் நடுவரால் அந்த பந்து நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தல தோனி சிக்ஸர் அடித்தார். ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் அதற்கேற்றவாறு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட மோரிசை அனைவரும் பாராட்டினர் என்றே சொல்லலாம்.

Story first published: Thursday, May 2, 2019, 0:10 [IST]
Other articles published on May 2, 2019
English summary
Delhi bowler chris morris says sorry to dhoni for full toss ball.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X