For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘செம ட்விஸ்ட்’.. ஸ்ரேயஸ் vs ரிஷப் பண்ட் .. டெல்லி அணியின் கேப்டன்சி அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடையே நிலவி வந்த கடும் போட்டிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கடந்த 2 வருடங்களாக வெற்றிகரமான முறையில் வழிநடத்தி வந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கு கடந்த மார்ச் 23ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தோள்பட்டை எலும்பு இடம் மாறியதால் ஸ்ரேயாஸுக்கு முக்கியமான அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஏனென்றால் காயம் சரியாக 3 - 4 மாதங்கள் ஆகும் என்று அப்போது கூறப்பட்டது.

ஐபிஎல்-ல் மேலும் ஒரு தமிழக பவுலர்.. அடுத்த யார்க்கர் நாயனாக வாய்ப்பு.. ஒப்பந்தம் போட்ட ஐதராபாத் அணி! ஐபிஎல்-ல் மேலும் ஒரு தமிழக பவுலர்.. அடுத்த யார்க்கர் நாயனாக வாய்ப்பு.. ஒப்பந்தம் போட்ட ஐதராபாத் அணி!

முதல் போட்டி

முதல் போட்டி

ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டதால், டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அணியில் அஸ்வின், ஸ்மித் என பல அனுபவ வீரர்கள் உள்ள போதும் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் வீரர் என்றாலும், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்து அசத்தினார். இவரின் கேப்டன்சியை பார்த்த கிரிக்கெட் வல்லுநர்கள், இந்திய அணியை வழிநடத்தவே தகுதியுள்ளது எனக்கூறினர்.

ரிஷப் பண்ட்-க்கு சிக்கல்

ரிஷப் பண்ட்-க்கு சிக்கல்

ஆனால் ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ள சூழலில் ரிஷப் பண்ட் தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டனாக நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது. ஏனென்றால் அறுவை சிகிச்சைப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். ஆனால் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் பூரண குணமடைந்து முழு உடற்தகுதியுடன் உள்ளார்.

மீண்டும் அணியில்

மீண்டும் அணியில்

இதனையடுத்து தேசிய அகாடமி சான்றிதழுடன் ஐபிஎல் தொடரின் 2 வது பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்கு திரும்பினார். இவர் தற்போது அமீரகத்தில் டெல்லி அணியுடன் தீவிர பயிற்சியி ஈடுபட்டு வருகிறார். எனவே மீண்டும் கேப்டன் பதவி அவரிடமே கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Recommended Video

Virat Kohli Captaincyயில் T20I debuts ஆன 5 Indian Players | OneIndia Tamil
கசிந்த தகவல்

கசிந்த தகவல்

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன்சி சண்டைக்கு, அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் 2வது பாதியிலும் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடரை டெல்லி அணி சிறப்பாக துவங்கியுள்ளதால் கேப்டன் மாற்றம் இப்போது அவசியம் இல்லை என்றும் ஆலோசனைக்கூட்டத்தில் டெல்லி அணி நிர்வாகிகள் யோசித்து வருவதாக தெரிகிறது.

டெல்லி அணி

டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் 2வது பாதி செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதில் மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. டெல்லி அணி வரும் செப்டம்பர் 22ம் தேதி தனது முதல் ஆட்டமாக ஐதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது. இந்த அணி தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Friday, September 17, 2021, 16:49 [IST]
Other articles published on Sep 17, 2021
English summary
Delhi capitals officially announced the Captain for IPL 2nd leg
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X