For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா! ஒரே போட்டியில் ஓஹோ சாதனை... புதிய வரலாறு படைத்த டேவன் கான்வே.. ஐசிசி தரவரிசை வெளியீடு!

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரர் டேவன் கான்வாய்-க்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது ஐசிசி தரவரிசை பட்டியல்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தாலும், நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே அனைவரின் மனதையும் வென்று விட்டார்.

எல்லாமே காப்பி.. ஐபிஎல் ஃபார்முலாவை அப்படியே பின்பற்றும் பாகிஸ்தான்.. இதில் ஐசிசி-க்கே அட்வைஸ்! எல்லாமே காப்பி.. ஐபிஎல் ஃபார்முலாவை அப்படியே பின்பற்றும் பாகிஸ்தான்.. இதில் ஐசிசி-க்கே அட்வைஸ்!

 அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் குறைந்த ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் அறிமுக வீரர் டேவன் கான்வே யாரும் எதிர்பார்க்காத வகையில் இரட்டை சதம் விளாசி மிரளவைத்தார். இதில் 22 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 57.64 ஆகும்.

டெஸ்ட் தரவரிசை பட்டியல்

டெஸ்ட் தரவரிசை பட்டியல்

டேவன் கான்வேவின் இந்த அசத்தில் இரட்டை சதத்திற்கு பலன் கிடைத்துள்ளது. ஐசிசி-ன் புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பார்காத வகையில் மிகப்பெரும் முன்னேற்றமாக 447 புள்ளிகளுடன் டேவன் கான்வே 77வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே இவ்வளவு புள்ளிகளை பெறுவது இதுவே முதல் முறை.

புதிய சாதனை

புதிய சாதனை

உலக கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையில் டேவன் கான்வே 3வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஃபோஸ்டர், 1903ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் முதல் டெஸ்ட் போட்டியில் 287 ரன்களை அடித்து 446 புள்ளிகளை பெற்றார். அதே போல வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் மேயர் வங்கதேசத்திற்கு எதிரான தனது அறிமுக டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் 40 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 210 ரன்களை எடுத்தார். இந்த போட்டி இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை

தரவரிசை

இந்த பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5ஆவது இடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தை ரிஷப் பந்த் தக்கவைத்துள்ளார், நியூசிலாந்து வீரர் ஹென்ட்ரி நிகோலஸை பின்னுக்குத்தள்ளி ரோஹித் ஷர்மா 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Thursday, June 10, 2021, 20:56 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
Newzealand batsmen Devon Conway Makes Impressive Debut in ICC Test Rankings, the highest point for a New Zealand batsman on debut
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X