ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் இருந்து தவான் திடீர் நீக்கம்

Posted By:

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் ஓபனிங் வீரர் ஷிகர் தவான் திடீரென நீக்கப்பட்டார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

Dhawan released from India's squad for first 3 ODIs against Australia

முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது.

இத்தொடருக்காக முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவான் தற்போது திடீரென இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தன்னை அணியில் இருந்துவிடுவிக்கும்படி அவரே கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Thursday, September 14, 2017, 16:38 [IST]
Other articles published on Sep 14, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற