For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு என்ட் கார்டு போடுகிறது பிசிசிஐ…! ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி..! கவலையில் ரசிகர்கள்

Recommended Video

Sourav Ganguly warns Indian team about Dhoni retirement

மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரில் தோனி இடம்பெற மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளதால், சர்வதேச போட்டிகளில் தோனியின் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறளது. செப்டம்பர் 15 ம் தேதி, மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. அதற்கான இந்திய அணி வீரர்களை ஓரிரு நாளில் பிசிசிஐ அறிவிக்கும் என தெரிகிறது.

அந்த தொடருக்கான அணியில் யார், யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே யார், யாருக்கு இடம் இருக்காது என்ற எதிர்பார்ப்பு தான் ஏகத்துக்கும் அதிகமாகி வருகிறது. தோனி என்ற ஒற்றை வார்த்தை 11 பேர் கொண்ட பெயர் பட்டியலில் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்நிலையில், அந்த போட்டிகளில் தோனி இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதாவது, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடை பெறும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தோனிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

ஆலோசனை

ஆலோசனை

இளம்வீரர் ரிஷப் பன்ட், எதிர்கால வீரர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் பெயர்கள் அதிகமாக தேர்வுக் குழுவினர்கள் ஆலோசிக்க இருக்கின்றனர். ரிஷப் பன்டுக்கு ஏற்கனவே பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டு விட்டதால், அவருக்கு மாற்றாக, மற்றொரு விக்கெட் கீப்பர்களாக சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்க்கலாம் என்றும் பரீசீலிக்கப்படும் என்று தெரிகிறது.

11 பேர் கொண்ட அணி

11 பேர் கொண்ட அணி

அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை தேர்வுக்குழுவினர் முடிவு செய்ய இருக்கின்றனர். யாரை சேர்க்கலாம், 11 பேர் கொண்ட அணி எப்படி இருக்க வேண்டும் என்றும் தேர்வுக்குழுவினர் சில தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இந்த தகவல்கள் எல்லாம் ஏன் இப்போது வெளிப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நோக்கம் என்ன?

நோக்கம் என்ன?

அணியில் இருந்து தோனியை முற்றிலும் ஓரங்கட்ட வேண்டும், என்ட் கார்டு போட வேண்டும் என்பது தான் தேர்வாளர்களின் நோக்கமாக இருக்கிறது என்று ரசிகர்கள் புகார் சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீசுக்கு அனுப்பப்பட்ட அணியினரையே இதற்கு தொடர வைக்கலாம், நல்ல பார்மில் இருக்கின்றனர் என்று காரணமும் வேறு வெளியாகி உள்ளது.

டி 20 உலக கோப்பை காரணமா?

டி 20 உலக கோப்பை காரணமா?

இவை எல்லாமே, தோனி அவராகவே ஓய்வை அறிவிக்க மறைமுகமாக கொடுக்கப்படும் நெருக்கடி என்று கூறப்படுகிறது. மேலும், 2020ம் ஆண்டு, அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி 20 உலக கோப்பைக்கான அணியைத் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக இப்போது இருந்தே பயிற்சிக்களங்களை உருவாக்க வேண்டும் என்று தேர்வுக் குழு முடிவு செய்திருப்பதை ரசிகர்கள் ஏற்கவில்லை.

மறைமுக காரணம்

மறைமுக காரணம்

தோனி அவராகவே அணியை விட்டு போய்விட வேண்டும், ஓய்வை அறிவித்துவிட வேண்டும் என்பதற்காக, மறைமுகமாக சொல்லப்படும் காரணங்கள் இவை என்று ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதையே தான் இப்போது முன்னாள் வீரர்கள் பலரும் சொல்கின்றனர். தேர்வுக்குழுவும் அதை வேறு வகையில் சொல்கிறது.

மில்லியன் டாலர் கேள்விகள்

மில்லியன் டாலர் கேள்விகள்

ஆக, தென் ஆப்ரிக்க தொடரிலும் தோனி சேர்க்கப்பட வில்லை என்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட கேள்விக்குறி என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகும் அடுத்து வரக்கூடிய தொடர்களிலும் தேர்வுக்குழு நிச்சயம் ஒரு காரணம் சொல்லும். ஆனால், அதற்கெல்லாம் தோனியின் தரப்பில் இருந்து என்ன பதில் சொல்லப்படும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

Story first published: Thursday, August 29, 2019, 16:25 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Dhoni cricket life may end after the announcement of indian team against south africa, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X