For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை தொடரில் இந்த சாதனையை படைப்பாரா தோனி?

Recommended Video

ஆசிய கோப்பை தொடரில் இந்த சாதனையை படைப்பாரா தோனி?- வீடியோ

பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் யுனைடெட் அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள 6 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட அணியில் தோனியும் இடம் பெற்றுள்ளார்.

Dhoni going to reach 10000 runs in ODI

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10000 ரன்களை எடுக்க இன்னும் 128 ரன்களே தேவை. இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த நான்காவது வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

தோனி இந்திய அணிக்காக 318 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9872 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 சதங்களும் 67 அரை சதங்களும் அடங்கும். அவர் ஆசிய லெவன் அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி 174 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 321 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 10046 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுத்துள்ளனர். அவர்களின் விவரம்

1. சச்சின் டெண்டுல்கர் - 18426 ரன்கள்

2. சௌரவ் கங்குலி - 11221 ரன்கள்

3. ராகுல் டிராவிட் - 10768 ரன்கள்

Story first published: Monday, September 3, 2018, 18:38 [IST]
Other articles published on Sep 3, 2018
English summary
Dhoni going to become fourth indian player to score 10000 runs in odi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X