For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனியின் இந்த ரிஸ்க் யாருக்கு வரும்...? உயிருக்கு ஆபத்தான படை பிரிவில் தீவிர பயிற்சி

காஷ்மீர்: ராணுவ பயிற்சியில் இருக்கும் தோனி, மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளான புல்வாமா பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

இதையடுத்து, 2 மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து தோனி தனது பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அந்த சாதனையை முறியடிக்க 112 ஆண்டுகள்...!! இங்கிலாந்துக்கு குவியும் வாழ்த்துகள் அந்த சாதனையை முறியடிக்க 112 ஆண்டுகள்...!! இங்கிலாந்துக்கு குவியும் வாழ்த்துகள்

புதிய தகவல்

புதிய தகவல்

இந்நிலையில் தோனி தேர்ந்தெடுக்கும் இந்த விக்டர் பிரிவு குறித்து குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இம்மாதம் 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை 106 தீவிரவாதிகள் தடுப்பு ராணுவ பட்டாலியன் படையினருடன் இணைந்து விக்டர் படையுடன் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

உருவான வரலாறு

உருவான வரலாறு

ஜம்மு, காஷ்மீரில் கிளர்ச்சி ஏற்பட்ட பின் உருவான அமைப்பு தான் ராஷ்டிரிய ரைபிள்ஸ் அல்லது ஆர்ஆர் எனப்படும் பிரிவாகும். இந்த பிரிவு விஸ்வநாத் பிரதாப் சிங் என்பவர் மூலம் அரசாங்கத்தின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டது.

காஷ்மீரில் படைகள்

காஷ்மீரில் படைகள்

ராணுவத்தின் பிற பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்ட ராணுவ வீரர்களால் உருவானது. இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெரும் ஆபத்து வாய்ந்த காஷ்மீர் பகுதிகளில் இந்த படைகள் செயல்பட்டு வருகின்றன.

தோடாவில் டெல்டா

தோடாவில் டெல்டா

மொத்தம் 5 வகைகளாக உள்ளன. ரோமியோ படையானது, ராஜோரி மற்றும் பூஞ்சில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. டெல்டா படை, தோடாவில் செயல்பட்டு வருகிறது.

உதம்பூரில் சீருடை

உதம்பூரில் சீருடை

விக்டர் படை, அனந்த்நாக், புல்வாமா,சோபியான், குல்கம் மற்றும் புட்காம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. கிலோ படையானது, குப்வாரா, பாராமுல்லா மற்றும் ஸ்ரீநகரில் செயல்பட்டு வருகிறது. சீருடை படை, உதம்பூர் மற்றும் பானி ஹாலில் செயல்பட்டு வருகிறது.

தோனி பயிற்சி

தோனி பயிற்சி

இந்த படைகளில் தோனி தேர்ந்தெடுத்திருக்கும் படை விக்டர் படையாகும். அண்மையில், மிக பெரிய தாக்குதலுக்கு உள்ளான புல்வாமா பகுதியிலும் செயல்பட்டு வருவதால் தோனி அதிபயங்கரமான இடத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 27, 2019, 20:02 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
Mahendra Singh Dhoni in vector range battalion in pulwama area.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X