தோனி இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறார்.. பரபரக்கும் தல ரசிகர்கள்.. பின்னணி என்ன?

Dhoni may retire today gossip spreads fast in twitter

மும்பை : தோனி ஓய்வு பெறப் போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. தோனி ரசிகர்கள் பலரும் தோனி இன்று ஓய்வு பெறப் போகிறாரா என கேட்டு வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் உலகில் மீண்டும் பரபரப்பை கூட்டி இருக்கிறார் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான தோனி. என்ன தான் நடந்தது? ஏன் இந்த திடீர் பரபரப்பு? உலகக்கோப்பை தொடர் முடிந்த உடனேயும் இதே பரபரப்பு ஏற்பட்டது.

Photos : நீச்சல் குளத்தின் நடுவில் ஒரு கியூட்டான குட்டி சுறா.. மனதை கொள்ளை கொண்ட ஸிவா தோனி!

ஓய்வு அறிவிக்கவில்லை

ஓய்வு அறிவிக்கவில்லை

தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றார்கள். ஆனால், அவர் ஓய்வு எதுவும் அறிவிக்கவில்லை. இந்திய அணியில் தன் எதிர்கால திட்டம் என்ன என்பதையும் தெரிவிக்கவில்லை.

தோனி விலகினார்

தோனி விலகினார்

உலகக்கோப்பை தொடருக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் தான் இரண்டு மாத காலம் ஓய்வில் செல்வதாக பிசிசிஐ-யிடம் கூறி விட்டு இரு வாரங்கள் இராணுவத்துடன் செலவிட்டார் தோனி.

தென்னாப்பிரிக்கா தொடரில்..

தென்னாப்பிரிக்கா தொடரில்..

அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை. அது குறித்தும் இது வரை தெளிவான விளக்கம் யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. தேர்வுக் குழு தலைவர் மட்டுமே, தோனி இளம் வீரர்களை தேர்வு செய்ய சொன்னார் என கூறினார்

பரவும் வதந்தி

ஆனால், அது உண்மையா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தான் தோனி ஓய்வு பெறப் போகிறார் என சமூக வலை தளமான ட்விட்டர் தீப் பிடித்து எரிந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் இன்று தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட உள்ளாரா? என கேட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்

ரசிகர்கள் வேண்டுகோள்

உலகக்கோப்பை முடிந்த பின் தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற செய்தி பரவிய போது கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தோனி ரசிகர்கள், ட்விட்டரில்,தோனி ஓய்வு பெற வேண்டாம் என வேண்டுகோள் வைத்து வந்தனர்.

மீண்டும் கோரிக்கை

தற்போது மீண்டும் தோனி ஓய்வு பெற உள்ளார் என தகவல்கள் வரும் நிலையில், மீண்டும் தோனி ஓய்வு பெற வேண்டாம் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தோனி இந்திய அளவில் டிரென்டிங் ஆகி வருகிறார்.

நன்றி தோனி

இது உண்மையா, இல்லையா என்றே தெரியாமல், சிலர் அதற்குள் தோனிக்கு நன்றி கூறி பதிவுகளை குவித்து வருகின்றனர். சிலர் பொருளாதார வீழ்ச்சி குறித்த பேச்சுக்களை திசை திருப்பவே தோனியை ஓய்வு பெற வைக்கப் போகிறார்கள் என்றும் கூறி கிச்சு கிச்சு மூட்டி வருகிறார்கள்.

இந்திய அணிக்கு தெரியும்

கோலி இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றின் பதிவில் தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார். அதை வைத்தும் சிலர் தோனி ஓய்வு பெறப் போவது இந்திய அணிக்கு தெரியும் என கூறி வருகின்றனர்.

வழியனுப்பு விழா வேண்டும்

சிலர் தோனிக்கு வழியனுப்பு விழா போட்டி கொடுத்து தான் அனுப்ப வேண்டும். அப்படியே ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது என கூறி உள்ளனர். தோனி இதற்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகிய போதும், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், எந்த அறிவிப்பும் இன்றி தான் அந்த முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

இன்று தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப் பட உள்ளது. அதை வைத்தும் சிலர் தோனி ஓய்வு அறிவிப்பு அப்போது வெளியாகும் என கூறுகின்றனர். தோனி ஏற்கனவே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுகிறது. இந்த வதந்தி பற்றி தோனி தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
“Dhoni may retire today” gossip spreads fast in twitter
Story first published: Thursday, September 12, 2019, 13:38 [IST]
Other articles published on Sep 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X