For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடு… இல்லைனா… பணம்.. ஏதாவது வாங்கி கொடுங்க யுவர் ஹானர்..! சுப்ரீம் கோர்ட் கதவை தட்டிய தல தோனி

டெல்லி:தன்னை ஏமாற்றிய கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாயை பெற்று தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் தல தோனி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் அமரப்பள்ளி குழுமத்தின் விளம்பர தூதராக மகேந்திர சிங் தோனி இருந்தார். 7 ஆண்டுகள் வரை அந்த நிறுவனத்திற்காக பல்வேறு விளம்பர படங்களிலும் தோனி நடித்தார்.

தோனி விளம்பரதாரர் ஆன பிறகு மட்டும் அமரப்பள்ளி நிறுவனமானது 46 ஆயிரம் பேரிடம் வீடுகளை விற்பனை செய்திருக்கிறது. அதாவது 46 ஆயிரம் பேர் அமரப்பள்ளி நிறுவனத்திடம் வீடுகளை வாங்க முன் பதிவு செய்து வைத்திருந்தனர்.

தோனி முன்பதிவு

தோனி முன்பதிவு

தோனியும், ராஞ்சியில் பென்ட் ஹவுஸ் எனப்படும் கண்ணாடி மாளிகை ஒன்றை, அமரப் பள்ளியிடம் இருந்து வாங்க முன்பதிவு செய்து வைத்திருந்தார். தன் விலை 1.20 கோடி என்று கூறப்படுகிறது. அவர் அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்ததனால் அதனை 20 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

ஏமாற்றியதாக புகார்

ஏமாற்றியதாக புகார்

இவரைப்போலவே பலர் குறைந்தவிலையில் அமரப்பள்ளியிடம் வீடுகளை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் வாக்களித்த படி அமரப்பள்ளி நிறுவனம் வீடு கொடுக்காமல் ஏமாற்றியது.

நெருக்கடியில் நிறுவனம்

நெருக்கடியில் நிறுவனம்

அமரப்பள்ளி நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. அதன் காரணமாக வீடு முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீடு வழங்க வில்லை. இதனால் பணமளித்த 46,000 பேரும் அந்த நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.

தோனி மனு

தோனி மனு

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தோனி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தான் நடித்துக் கொடுத்த விளம்பரப் படங்களுக்கு அமரப்பள்ளி நிறுவனம் ரூபாய் 40 கோடியை இன்னும் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.

விசாரிக்க உத்தரவு

விசாரிக்க உத்தரவு

எனவே, அதனைப் பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம் அமரப்பள்ளி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

புதியதாக ஒரு மனு

புதியதாக ஒரு மனு

தற்போது மேலும் ஒரு மனு தோனி தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில் தான் நொய்டாவில் வாங்கிய வீட்டை இன்னும் அமரப்பள்ளி நிர்வாகம் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.எனவே அமரப்பள்ளி குழுமத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Story first published: Sunday, April 28, 2019, 20:33 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
Dhoni Moves Top Court Against Amrapali Group Over Alleged Cheating.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X