For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்த தல தோனி சூப்பர் பிளான்..! பேட்டிங், பவுலிங்கில் மாற்றங்கள்

Recommended Video

IPL 2019: Qualifier 2: டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேற டோனியின் திட்டம்- வீடியோ

விசாகப்பட்டினம்:டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர்- 2 போட்டியில் அணியில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள தல தோனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. சென்னையில் நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது.

Dhoni plans to change players against delhi capitals match

எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் ஹைதராபாத் அணியினை சூப்பராக வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 2-வது தகுதி சுற்று ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கிறது. டெல்லி அணி சென்னை அணியுடன் குவாலிபயர்- 2 போட்டியில் மோத இருக்கிறது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, டெல்லி அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதனால் அணியில் சில மாற்றங்கள் செய்ய தோனி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஷேன் வாட்சனுக்கு பதிலாக முரளி விஜய்யை துவக்க வீரராக களமிறக்கவும்,மிடில் ஆர்டரில் துருவ் சோரேவையும் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Women's T20 challenge : நிறுத்தி நிதானமாக ஆடிய மிதாலி - வேதா கூட்டணி.. சூப்பர்நோவாஸ் வெற்றி! Women's T20 challenge : நிறுத்தி நிதானமாக ஆடிய மிதாலி - வேதா கூட்டணி.. சூப்பர்நோவாஸ் வெற்றி!

ஏன் எனில், முரளி விஜயை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனராக இறங்க வில்லை. கடந்த கால போட்டிகளில் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மெனாக தான் இருந்திருக்கிறார். அப்படி அவரை இறக்காமல் விட்டதாலேயே அணியின் ரன்விகிதம் தொடக்கத்தில் குறைந்து போனதாகவும், தோனி எடுத்த இந்த முடிவு தவறாக போய்விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் மாற்றங்களை கொண்டு வர தோனி தீர்மானித்து ள்ளார். அதன்படி, வேகப்பந்து வீச்சில் சென்னை அணி தீபக் சாஹரை நம்பி இருக்கிறது. எனவே, மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

Story first published: Friday, May 10, 2019, 10:23 [IST]
Other articles published on May 10, 2019
English summary
Dhoni plans to change players against delhi capitals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X