டோணியை கழட்டிவிட பார்த்த சிஎஸ்கே!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் – இந்தப் பெயரை சொன்னவுடன் சின்னக் குழந்தைகூட விசில் போட்டு சொல்லும் பெயர் மகேந்திர சிங் டோணி. கேப்டன் கூல் டோணி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரைக் கழட்டிவிட, சிஎஸ்கே அணி முயற்சித்தது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன், அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்று பல பெருமைகளை உடையவர் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி.

இரண்டாண்டுகள் தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட முடியாமல் போனது. தற்போது மீண்டும் அந்த அணி களமிறங்கியுள்ள நிலையில், டோணிதான் அந்த அணியின் முதல் சாய்ஸ்.

கிட்டத்தட்ட சிஎஸ்கே அணி டோணியின் அணியாகவே பார்க்கப்படுகிறது. இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தையும் சிஎஸ்கேவுக்கு பெற்றுத் தந்தவர் டோணி.

நம்ம வீட்டு பிள்ளை

நம்ம வீட்டு பிள்ளை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவராக இருந்தாலும், சென்னை அவருடைய இரண்டாவது வீடு. நம்ம வீட்டுப் பிள்ளையாக கொண்டாடப்படும் தல டோணியை, கழட்டிவிடுவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சி செய்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது நடந்தது.

ரூ.6 கோடிக்கு ஏலம்

ரூ.6 கோடிக்கு ஏலம்

2008ல் முதல் ஐபிஎல் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதற்கு ஏலம் நடந்தது. அப்போது, 15 லட்சம் டாலர்கள், அதாவது, ரூ.6 கோடிக்கு டோணியை சிஎஸ்கே ஏலம் எடுத்தது. அந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் டோணிதான்.

டோணி வேண்டாம்

டோணி வேண்டாம்


ஏலத்துக்கு முன்பாக, அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசன், அணி தேர்வு குழுவினருடன் பேசினார். எப்படியாவது, வீரேந்திர சேவாக்கை ஏலம் எடுங்கள். அவர்தான் சிஎஸ்கே கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிஎஸ்கே அணி தேர்வு குழுவின் தலைவரான முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர், டோணியை எடுக்கலாம் என்றார். அவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

அதிக விலைக்கு வேண்டாம்

அதிக விலைக்கு வேண்டாம்

வடிவேலு ஜோக் போலில்லாமல், சந்திரசேகர் காரணத்தை கூறியபோதும், அரை மனதுடன் ஸ்ரீனிவாசன் ஒப்புக் கொண்டுள்ளார். ஏலத்தின்போது, 18 லட்சம் டாலர் வரை டோணியின் விலை இருக்கும் என்று கூறப்பட்டது. 15 லட்சம் டாலர் வரை எடுக்கலாம். அதற்கு மேல் வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு கிடைத்தார்

சிஎஸ்கேவுக்கு கிடைத்தார்


காரணம், அணிக்கு 50 லட்சம் டாலர் தான் பட்ஜெட். அதில் 15 லட்சம் டாலர் டோணிக்கு போனால், மீதி பணத்தில் மற்ற வீரர்களை தேர்வு செய்யலாம் என்று கணக்கிட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீனிவாசனின் அதிர்ஷ்டம், அணிக்கு டோணி கிடைத்தார். இதை சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். டோணி இல்லாத சிஎஸ்கே அணியை ஸ்ரீனிவாசன் உள்பட அணி நிர்வாகம் நினைத்து பார்க்க முடியுமா? தலக்கு ஒரு பெரிய விசில் போடுங்க.

Story first published: Wednesday, January 31, 2018, 15:42 [IST]
Other articles published on Jan 31, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற