For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 பைனல்களுக்கு இவர்தான் கிங் அம்பயர்.. மறக்க முடியாத டிக்கி பேர்ட்.. தாத்தாவுக்கு வயசு 87

லண்டன்: டிக்கி என்ற செல்லப் பெயருடன் கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஹரால்ட் டென்னிஸ் டிக்கி பேர்ட். இங்கிலாந்துக்காரர். இன்று இவருக்கு 87 வயதாகிறது.

87 வயதாகும் டிக்கி பேர்ட் தனிச் சிறப்பு கொண்ட ஒரு நபர் ஆவார். இவர் கிரிக்கெட் வீரராக சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பின்னர் அம்பயராக மாறியவர். அம்பயராகவும் இவர் தனிச் சிறப்பு படைத்து சாதனை படைத்தவர்.

அட்டகாசமாக இருக்கும் இவரது தீர்ப்புகள். இதனால் கிரிக்கெட் வீரர்களாலும், ரசிகர்களாலும் அதிகம் விரும்பப்பட்டவர் டிக்கி பேர்ட். இவரது ஆட்டத்தை விட அம்பயரிங் பிரபலமானது.

அப்படி ஒரு சிக்ஸ், இப்படி ஒரு சிக்ஸ்.. மொத்த பாகிஸ்தானையும் தன் பக்கம் இழுத்த தமிழக வீரர்!அப்படி ஒரு சிக்ஸ், இப்படி ஒரு சிக்ஸ்.. மொத்த பாகிஸ்தானையும் தன் பக்கம் இழுத்த தமிழக வீரர்!

நிதானமான பேட்ஸ்மேன்

நிதானமான பேட்ஸ்மேன்

டிக்கி பேர்ட் வலது கை பேட்ஸ்மேன். ரொம்ப நிதானமான பேட்ஸ்மேன். கட்டையைப் போட்டு போட்டு விளையாடுவார். முதல் தரப் போட்டிகளில் இவர் மொத்தமே 2 செஞ்சுரிதான் போட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவருக்கு சின்ன வயதிலேயே துரதிர்ஷ்டம் அவரது முழங்கால் ரூபத்தில் வந்து சேர்ந்தது. இதனால் இளம் வயதியிலேயே இவர் விளையாட்டை விட நேரிட்டது.

ஆட்டத்திலிருந்து ஓய்வு

ஆட்டத்திலிருந்து ஓய்வு

இவருடைய 30வது வயதில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இவர் நடுவராக மாறினார். குறுகிய காலத்திலேயே மிகச் சிறந்த நடுவராக உருவெடுத்தார். அம்பயரிங்தான் டிக்கி பேர்டுக்கு மிகப் பெரிய பிரபலத்தைக் கொடுத்தது. ஆடியபோது கிடைக்காத பெருமை களத்தில் நின்றபோது கிடைத்தது.

66 டெஸ்ட் போட்டிகளில் அம்பயரிங்

66 டெஸ்ட் போட்டிகளில் அம்பயரிங்

மொத்தம் 66 டெஸ்ட் போட்டிகளில் இவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இது அப்போது பெரிய சாதனையாகும். அதேபோல 69 ஒரு நாள் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார். அதில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதாவது 3 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார். எந்த அம்பயருக்கும் கிடைக்காத பெருமை இது. சாதனை இது.

இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் கடைசி

இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் கடைசி

1996ம் ஆண்டு இவர் கடைசி முறையாக டெஸ்ட் போட்டியில் அம்பயராகப் பணியாற்றினார். அது இங்கிலாந்து, இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியாகும். இவர் களத்திற்குள் நுழைந்தபோது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அதேபோல இரு அணியினரும் வரிசையில் நின்று கைதட்டி வரவேற்று கெளரவித்தனர். அப்போது அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.

அம்பயராக சாதனை

அம்பயராக சாதனை

பல சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர். ஒரே நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் டெஸ்ட் அம்பயராக பணியாற்றியவர் இவர்தான். இங்கிலாந்தில் மட்டும் இவர் 54 டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றியுள்ளார். இவரது சுயசரிதைப் புத்தகம் 10 லட்சம் காப்பிகள் விற்று சாதனை படைத்தது. அதேபோல லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக அளவிலான போட்டிகளுக்கு அம்பயராக இருந்துள்ளார். இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைத்து கெளரவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, April 19, 2020, 18:55 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Former Umpire and English Cricketer "Dickie" Bird Celebrates his 87th Birthday Today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X