இவ்வளவு பாதுகாப்போடு விளையாட வித்தியாசமாக இருக்கிறது.. சென்னையில் தினேஷ் கார்த்திக் கலக்கம்!

Posted By:
சென்னையில் தினேஷ் கார்த்திக் கலக்கம்!- வீடியோ

சென்னை: சென்னை மைதானத்தில் முதல்முறையாக இவ்வளவு பாதுகாப்போடு விளையாடுவது வித்தியாசமாக இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது.

இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த போட்டியை நடத்த கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சென்னை அணி சரியாக இரண்டு வருடங்களுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் ஐபிஎல் போட்டியை மும்பையில் விளையாடிவிட்டாலும், சென்னையில் நடக்கும் முதல் போட்டி இதுதான் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாகவே இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பதிலளிக்க மறுப்பு

பதிலளிக்க மறுப்பு

இந்த நிலையில் நேற்று சென்னை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காக கொல்கத்தா அணி சென்னை வந்தது. அவர்களுக்கு மிகவும் அதிக அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த தினேஷ் கார்த்திக்கிடம், காவிரி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவீர்களாக என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு தினேஷ் கார்த்திக் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு

இந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்ததை குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அதில் ''இவ்வளவு பாதுகாப்போடு என்னுடைய சொந்த ஊருக்கு வந்து விளையாடுவது வித்தியாசமாக இருக்கிறது'' என்று அவர் மைதானத்திற்கு செல்லும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வருத்தமாக பதில் அளித்துள்ளார்கள்.

அஸ்வின் காமெடி

அஸ்வின் காமெடி

ஆனால் இந்த ரணகளத்திலும் அஸ்வின் காமெடி செய்து இருக்கிறார். தினேஷ் கார்த்திக் போஸ்ட்டில் அஸ்வின் '' நீ நடந்தால் நடை அழகு.. அழகு'' என்று காமெடி செய்துள்ளார். அதற்கு தினேஷ் கார்த்திக் பயந்து கொண்டே ''ஏண்டா அஸ்ஸி.. உனக்கு நான்தான் கிடைச்சனா?'' என்று பதில் அளித்துள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Dinesh Karthik feels sad about the high security in Chennai Chepauk.
Story first published: Tuesday, April 10, 2018, 9:23 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற